மீஞ்சூர், மே. 02

திருவள்ளூர் மாவட்டம்,காட்டுப்பள்ளி ஊராட்சியில் அடங்கிய எண்ணூர் நிலக்கரி சேமிப்பு கிடங்கு முன்பு சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி ஒருங்கிணைந்த பகுதி டிப்பர் லாரி மற்றும் டிரெய்லர் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்போராட்டம் குறித்து அவர்களின் தரப்பில் கூறப்படுவது யாதெனில் டிப்பர் வாகனங்களில் இருந்து கொண்டு செல்லும் நிலக்கரிக்கான வாடகைக் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று முடிவு செய்து , 2020 ஆம் ஆண்டு முதல் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு, அந்த விகிதத்தில் மட்டுமே டிப்பர் வாகனங்களை இயக்கி வருவதாகவும், அப்போது டீசல் விலை.  80 ரூபாயாக இருந்தது ஆனால் இப்போது 102 ரூபாய் பின்னர் டயர் விலை அப்போது 37000 / – இப்போது டயர் விலை சுமார் 49500.சுங்கச்சாவடியில் 2020 இல் கட்டணம் இல்லை, இப்போது 2022 இல் மீஞ்சூர் முதல் வண்டலூர் வரை புதிய கட்டணமும் அதே போல் அனைத்து விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

விலைவாசி உயர்வால் இந்த போக்குவரத்து தொழிலை தங்களால் தக்கவைக்க முடியவில்லை இதனால் தங்கள் குடும்பம் மட்டுமல்லாது தங்களை நம்பி இருக்கும்  குடும்பம் கடுமையாக பாதிக்கப்பட்டு அன்றாட அத்தியாவசிய செலவுகளை கூட சமாளிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

லாரி உரிமையாளர்கள் போக்குவரத்தை நடத்த மிகவும் சிரமப்படுகின்றனர், மேலும் வீட்டு வாடகை, பள்ளி கட்டணம் கட்ட முடியவில்லை எனவும் இதனை சமாளிக்க இறுதியாக 30 சதவீதத்தை அதிகரிக்க வேண்டி கோரிக்கை வைக்கப்பட்டது. அதை தொடர்ந்து அதற்கான சமாதானக் கூட்டம் சென்னை மாதவரத்தில் நடைபெற்றது.

கூட்டத்தின் முடிவில் ஒரு வார காலம் அவகாசம் கம்பெனி சார்பில் கோரப்பட்டது. இதுவரை ஒரு வார காலத்தில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால்  டீசல் விலை உயர்வு .டயர் கட்டண உயர்வு டோல் பிளாசா மற்றும் புதிய டோல் பிளாசா கட்டணம் அதிகரிப்பு .வரி அதிகரிப்பு , அனுமதி , எஃப்சி மற்றும் அனைத்து பிற ஆர்.டி.ஓ வேலை கட்டணங்கள் உட்பட .உதிரி பாகங்களின் விலை உயர்வு .அதிகரிப்பு காப்பீட்டுத் தொகையின் 7. அடிப்படைத் தேவைகளின் அதிகரிப்பு விகிதம் வேண்டி சென்னை , எண்ணூர் , காட்டுப்பள்ளி ஒருங்கிணைந்த பகுதி டிப்பர் லாரி மற்றும் டிரெய்லர் உரிமையாளர் சங்கத்தினர் காட்டுப்பள்ளி ஊராட்சியில் உள்ள எண்ணூர் நிலக்கரி கிடங்கு முன்பு காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்போராட்டம் தலைவர். சரவணன் தலைமையில். செயலாளர் சுரேஷ்,பொருளாளர் ஜெய்சங்கர் . துணைத் தலைவர் ராம்குமார் ஆகியோர் முன்னிலையில் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here