ராமநாதபுரம், மே 19-

ராமநாதபுரம் மாவட்டம் கொட்டகை ஸ்ரீ வரம் கொடுக்கும் கருப்பசாமி மற்றும் ஸ்ரீ பதினாறுபிள்ளை காளி அம்மன் கோயிலில் வனதுர்கா அம்மன் சிலை பிரதிஷ்டை விழா பக்தர்கள் முன்னிலையில் வெகு விமர்சையாக நடந்தது.

9 வகையான துர்கை அம்மன்களில் வனதுர்கை அம்மன் மிகவும் சக்திவாய்ந்த துர்கை அம்மனாகும். வனதுர்கைக்கு அரளி மாலை அணிவித்தும் நெய்விளக்கு ஏற்றியும் வந்தால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது சான்றோர் வாக்கு. ராமநாதபுரம் மாவட்டம் கொட்டகை ஸ்ரீ வரம் கொடுக்கும் கருப்பசாமி மற்றும் ஸ்ரீ பதினாறுபிள்ளை காளி அம்மன் கோயிலில் பரிவார தெய்வமாக வனதுர்கை அம்மன் சிலை பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு வேத விற்பன்னர்கள் வேதங்கள் முழங்க விக்னேஸ்வர பூஜை, புண்ணிய யாக பூஜை, காயத்ரி ஹோமம், கணபதி ஹோமம் நடத்தப்பட்டது. பூஜையை தொடர்ந்து கோயில் பூசாரி அருள்வாக்கு எம்.பி.கே.சிவா கோமாதாவிற்கு பட்டு வஸ்திரம் அணிவித்து கோமாதா பூஜை நடத்தினார். அதனை தொடர்ந்து பூசாரி அருள்வாக்கு சிவா உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் புனித நீர் கும்பத்தை சுமந்து கொண்டு கோயிலை வலம் வந்து வன துர்க்கை அம்மன் மூல மந்திர தகட்டில் புனித நீர், மஞ்சள், பால், இளநீர் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. பின் வனதுர்க்கை அம்மன்மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தப்பட்டு பிரதிஷ்டை விழா வெகு விமர்சையாக நடந்தது.

வடக்கு திசை நோக்கி உள்ள வனதுர்கை அம்மனை தொடர்ந்து 7 வாரம் பூஜை செய்தால் தீராத பிரச்னைகள் நொடியில் தீர்ந்துவிடும். அருள்வாக்கு பூசாரி சிவா கூறியதாவது:
திருமண தடை, குழந்தையின்மை, தீராத நோய், தீராத நீண்டநாள் பிரச்னைகள், கணவன் மனைவி பிரச்னைகள், தொழில் அபிவிருத்தி, செய்வினை கோளாறு சரிசெய்தல் போன்ற அனைத்துவிதமான பிரச்னைகளுக்கும் வனதுர்கையை வணங்கி விளக்கு ஏற்றினால் போதும் நினைத்த காரியம் நிறைவேறிவிடும், என்றார்.
பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு பக்தர்களுகு்கு எம்பிகே குரூப்ஸ் அன்னதான கமிட்டி சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை பூசாரி தலைமையில் ராமஜெயம், லட்சுமணன், பாண்டி, குத்புதீன் உள்ளிட்ட விழா குழுவினர் செய்திருந்தனர். 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here