நடுவக்கரை, ஜூலை. 27 –

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள புளியம்பேட்டை நடுவக்கரை கிராமத்தில் காவல் தெய்வமாக அமர்ந்து அருள் பாலித்து வரும் ஸ்ரீ பாட்ட முனீஸ்வரர் ஆலயத்தில் பக்தர்கள் பால்குடம் சுமந்து வந்தும், அலகு குத்தி, காவடி எடுத்து வந்தும் முக்கிய தெரு வீதிகளில் வலம் வந்தனர்.

அதனைத்தொடர்ந்து அவர்களுக்கு வீடு வீடாக பக்தர்கள் காலில் தண்ணீர் ஊற்றி வணங்கி தீபாராதனை காட்டியும் அர்சனைகள் செய்தும் வழிபட்டனர்.

மேலும், அலகு குத்தி வந்த காவடிகள் உடன் மேளதாளங்கள் முழங்க நடனத்துடன் ஆலயத்தை அடைந்த பக்தர்கள் தலையில்  சுமந்து வந்த பால் குடத்தினை ஸ்ரீபாட்ட முனீஸ்வரர் சுவாமிகளுக்கு அபிஷேகம் செய்தவுடன்  மலர் அலங்காரத்துடன் மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இவ்விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும், கலந்து கொண்ட அனைவருக்கும் அருட்பிரசாதங்களும் அன்னதான பிரசாதங்களும் வழங்கப்பட்டது. இவ்விழா ஏற்பாடுகள் அனைத்தையும் நடுவக்கரை கிராம மக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here