நன்னிலம், ஜூன். 30 –

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள பாக்கம் கோட்டூர் பஞ்சாயத்து கீழப்பாக்கம் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம் 50 ஆண்டுகளுக்கு பிறகு புதியதாக கட்டப்பட்டு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் கடந்த ஜூன் 27 ஆம் தேதியன்று நடைபெற்றது.

இவ்விழாவினை முன்னிட்டு இரண்டு கால யாக பூஜைகள் நடைபெற்று இரண்டாம் கால யாக பூஜையின் மகா பூர்ணாஹுதி நடைபெற்றது. அதன் பிறகு மகா தீபாராதனையுடன் மேளதாளங்கள் முழங்க கடங்கள் புறப்பட்டு ஆலயத்தை வலம் வந்து விமான கோபுரத்தை அடைந்து  சரியாக ஏழு முப்பது மணி அளவில் விமான கோபுரத்திற்கு புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து, மூலவரான ஸ்ரீசித்தி விநாயகர் மற்றும் ஸ்ரீமுருகனுக்கு புனித நீர் ஊற்றி அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று அலங்காரத்துடன் மகா தீபாரதனை நடைபெற்றது. அதன் பிறகு பக்தர்களுக்கு பிரசாதம் அன்னதானம் பிரசாதங்கள் வழங்கப்பட்டது இதில் வேளாக்குறிச்சி ஆதீனம் மற்றும் சின்மயானந்தா சுவாமிகள் கலந்து கொண்டு பக்தர்களுக்கு ஆசி வழங்கி பிரசாதங்கள் வழங்கினர். விழாவினை கீழப்பாக்கம் கிராமவாசிகள் இளைஞர் மன்றங்கள் மற்றும் தர்ம ரக்ஷண ஸமிதி அமைப்பினர் விழாவினை சிறப்பாக நடத்தினர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here