பொன்னேரி, செப். 09 –

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், மெதூர் அடுத்துள்ள  எடக்குப்பத்தில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ நூக்காளம்மன் திருக்கோயில் இக்கோயிலின் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவிற்காக நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைப்பெற்றது. அதில் கணபதி ஹோமம், கோ பூஜை, மூலமந்திர ஹோமம் உள்ளிட்ட ஹோமங்களும் நடைபெற்றது. பின் கடம் புறப்பாடு நடைபெற்று விமான கோபுரத்தில் உள்ள கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்ட்டு மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைப்பெற்றது. அதனைத் தொடர்ந்து இவ்விழாவினை காண வந்த பக்தர்கள் மீது கலசநீர் தெளிக்கப்பட்டது. மேலும் கர்பக்கிரகம் ஸ்ரீ நூக்காளம்மனுக்கு மகாஅபிஷேகமும் தீபாராதனையும் காட்டப்பட்டு வழிப்பாடு நடைப்பெற்றது.

இந்நிகழ்ச்சியில் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை எடக்குப்பம் கிராம மக்கள் ஒன்று கூடி மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here