திருவாரூர், செப். 12 –
திருவாரூர் மாவட்டம் திருவாரூர் வட்டம் தோட்டக்குடி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர், ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயம் மற்றும் ஸ்ரீ பிடாரியம்மன் ஆலயங்களின் மகாகும்பாபிஷேகம் வெகு சிறப்பாக இன்று நடைபெற்றது.
இம் மூன்று ஆலயங்களின் திருப்பணிகள் 12 வருடத்திற்கு பிறகு புதுப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து நான்கு கால யாக பூஜைகள் நடைபெற்றது. நான்காம் கால யாக பூஜை நடைப்பெற்ற இன்று மகாபூர்ணாஹூதியுடன் மகாதீபாரதனை நடைபெற்றது.. தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க கடங்கள் புறப்பட்டு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் மகாகும்பாபிஷேகம் முதலில் நடைப்பெற்று அதனை தொடர்ந்து ஸ்ரீ பிடாரியம்மன் ஆலய மகா கும்பா அபிஷேகமும் அடுத்து ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் விமான கோபுரத்திற்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மூலவர் மற்றும் உற்சவர்களுக்கு மஹா அபிஷேகம் செய்து அலங்காரத்துடன் தீபாராதனை நடைபெற்றது.
இந்த நிகழ்வினைக் காண திரளான வருகை புரிந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மேலும் இவ்விழாவிற்கான ஏற்பாட்டினை தோட்டக்குடி திருப்பணி குழு மற்றும் கிராமவாசிகள் மருளாளிகள் ஏற்பாடு செய்து சர்வசாதகமாக திருவாரூர் சுந்தரமூர்த்தி சிவாச்சாரியார் மற்றும் ஆலய அர்ச்சகர் நாடாகுடி சுப்பிரமணியன், இராமலிங்கம் ஆகியோர் இந்த யாக பூஜைகள் நடத்தி விழா நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதங்களும் அன்னதான பிரசாதங்களும் வழங்கப்பட்டது.