காஞ்சிபுரம், மே. 21 –
காஞ்சிபுரம் அருள்மிகு தேவராஜசுவாமி திருக்கோவிலில் வைகாசி பிரம்மோற்சவ விழா கடந்த வாரம் துவங்கியது அத்தி வரதர் பெயர் பெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பத்து நாட்கள் இந்த திருவிழா நடைபெறுவது வழக்கம்.
கொரோனா பரவல் காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்த திருவிழா நடைபெற்று வருகின்றது. முதல் நாள் கொடியேற்றத்துடன் துவங்கிய திருவிழா மூன்றாம் நாள் கருடசேவை, ஏழாம் நாள் தேர் திருவிழாவை தொடர்ந்து ஒன்பதாம் நாளான இன்று ஆல்மேல் பல்லக்கு திருவிழா நடைபெற்று வருகின்றது.
காஞ்சிபுரம் முக்கிய வீதிகளில் குறிப்பாக செட்டி தெரு, ரங்கசாமிகுளம், தேரடி, காந்திசாலை, பெரியார்தூண், மூங்கில் மண்பம், காமராஜர் சாலை, நான்கு ராஜ வீதி வழியாக பக்தர்களுக்கு காட்சியளித்தார். நாளையுடன் நிறைவு பெறும் இந்த திருவிழா காஞ்சிபுரம் நகரமே விழா கோளம் பூண்டுள்ளது.