சென்னை, அக். 27 –
ஊழல் ஒழிப்பு தொடர்பாக சர்தார் வல்லாய் படேல் பிறந்த நாள் அக் 31 வரும் வாரத்தில் ஒவ்வொரு ஆண்டும் இந்தியா முழுவதும் விழிப்புணர்வு வாரம் கடைப் பிடிக்கப்படுகிறது.
இந்த ஆண்டு ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் அக். 26 முதல் நவ 1 -2021 வரை கடைப் பிடிக்கப் படுகிறது. ஊ.லுக்கு எதிராக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், ஊழலுக்கு எதிராக போராடத்தில் அனைவரையும் ஈடுப்படுத்தவும் வாரம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளின் வாயிலாக தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் இயக்குநரகம் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ஐ.சி.ஏ.டி. டிசைன் மற்றும் மீடியா கல்லூரியுடன் இணைந்து மெரினா கடற்கரையில் காந்தி சிலைக்கு பின்புறம் மணல் சிற்பம் ஐ.சி.ஏ.டி மாணவர்களால் உருவாக்கப் பட்டுள்ளது. அதனை இன்று அக்.27-2021 மாலை 4.30 மணிக்கு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்குநர் பொது மக்கள் பார்வைக்கு திறந்து வைத்தார். ஊழலுக்கு எதிராக உள்ள போராட்டத்தில் பொது மக்கள் அனைவரும் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்