பழவேற்காடு, பிப். 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் எஸ்.பாலகணபதி…
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த பழவேற்காடு பகுதி வாழ் மீனவ மக்களுக்கு தமிழ்நாடு அரசு திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் மூலம் பொன்னேரி வட்டத்திற்குட்பட்ட பழவேற்காடு மீனவ மக்களுக்கு நடைப்பெற்ற நங்கூரம் வேலை வாய்ப்பு முகாமில், பணி நியமனம் பெற்ற வேலை நாடுநர்களுக்கான 260 நபர்களுக்கு, நியமன ஆணைகள் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான உத்தரவுகள் 27 நபர்களுக்கு வழங்கும் விழா மீன் இறங்கு தளம் பகுதியில் நடைபெற்றது.
.அவ்விழாவிற்கு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிரபுசங்கர் தலைமை வகித்தார், திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார், பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் துரை சந்திரசேகர், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே.கோவிந்தராஜன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர்,
பொன்னேரி சார் ஆட்சியர் வாகே சங்கெத் பல்வந்த் அனைவரையும் வரவேற்றார் இதில் சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர் காந்தி கலந்துகொண்டு 287 நபர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கி சிறப்புரையாற்றினார். விழாவில் முன்னாள் திமுக மாவட்ட செயலாளர் இ.ஏ.பி.சிவாஜி ,மீஞ்சூர் ஒன்றிய பெருந்தலைவர் அத்திப்பட்டு ஜி.ரவி ,பொன்னேரி நகராட்சி மன்ற தலைவர் டாக்டர்.பரிமளம் விஸ்வநாதன், ஒன்றிய செயலாளர்கள் பொன்னேரி சுகுமாரன் ,வல்லூர் ரமேஷ்ராஜ், காணியம்பாக்கம் ஜெகதீசன், அரங்கங்குப்பம் ஜெயபால் ,மாவட்ட கவுன்சிலர் தேசராணி தேசப்பன் உள்ளிட்ட திமுக ,காங்கிரஸ் மாவட்ட ,நகர, நிர்வாகிகள் மற்றும் மீனவ கிராம நிர்வாகிகள் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை பொன்னேரி தாசில்தார் மதிவாணன் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் செய்திருந்தனர்