மீஞ்சூர், மே. 12 –

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியான நந்தியம்பாக்கம் ஊராட்சியில்,  மீஞ்சூர் காவல் நிலையக் காவல்துறையினர் சார்பில் பொதுமக்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரக் கூட்டம், அவ்வூராட்சி மன்ற தலைவர் கலாவதி நாகராஜன் தலைமையிலும், துணை தலைவர் எம்.கலாவதி, வார்டு உறுப்பினர்கள் காதர்பாஷா, தினேஷ், வாணி, புஷ்பராஜ், வேங்கடநாதன், வள்ளி, உள்ளிட்டவர்கள் முன்னிலையில் நடைப்பெற்றது.

மேலும் இவ்விழிப்புணர்வு பிரச்சாரக் கூட்டத்திற்கு, மீஞ்சூர் காவல் நிலைய ஆய்வாளர் சிரஞ்சீவி சிறப்பு அழைப்பாளராக வருகை தந்தார். தொடர்ந்து காவல் ஆய்வாளர் பொதுமக்களிடையே பாதுகாப்பு விழிப்புணர்வுக் குறித்து  உரை நிகழ்த்தினார்.

அப்போது அவர் இரவு நேரத்தில்  பெண்களின் பாதுகாப்பு மிக முக்கியம் எனவும், அதுப்போன்று  பொதுமக்கள் உறங்கச் செல்லும் போது வீட்டின் கதவை தாழிட்டு, பின்பு பாதுகாப்பாக படுக்கைக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தினார்.

மேலும், பெண்கள் விழாக் காலங்களில் அந்நிகழ்ச்சிகளுக்கு, தங்க நகைகளை அணிந்துக்கொண்டு செல்லும் போது, மிகவும் கவனத்துடனும் பாதுகாப்புடனும் செல்ல வேண்டும் எனவும், மேலும்  திருட்டுக்களை தடுத்திடவும்,  நமது உடமைகளை பாதுகாப்புடன்  பார்த்துக்கொள்ள வேண்டுமெனில்,  கிராமத்திலேயோ அல்லது கிராம வீதிகளிலோ சந்தேகம் படும்படியான வகையில் புதிய நபர்களின் நடமாட்டம் தெரிந்தால் அதுக்குறித்து உடனடியாக காவல்நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் ஊராட்சி செயலர் சுரேஷ், காவலர் சுரேஷ்குமார்,  உள்ளிட்டவர்களும் 100 – க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் அக்கிராம மக்கள் என திரளானவர்கள் பங்கேற்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here