கும்பகோணம், ஏப். 10 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
கும்பகோணத்தில் நேற்று மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பாபுவை ஆதரித்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் காந்தி பூங்கா முன்பு பிரச்சாரம் மேற்கொண்டார்.
அக்கூட்டத்தில் பேசிய அவர்,
மற்ற கட்சிகள் ஏழு பேர், பத்து பேர் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றனர். நீங்கள் நான்கு பேருடன் கூட்டணி அமைத்துள்ளீர்கள் என கேட்கின்றனர். அந்த கூட்டணி வானவில் கூட்டணி பார்க்க அலங்காரமாக இருக்கும் நாங்கள் நால்வர் கூட்டணி பலமாக இருக்கும்.
அதிமுக, தேமுதிக, எஸ்டிபிஐ என எங்களுடைய கட்சிகளின் பெயரும் நான்கெழுத்து, கூட்டணியும் நால்வர் கூட்டணி, தேர்தல் முடிவுகளும் நான்காம் தேதி எனவே எங்களுடைய வெற்றி இந்தியாவை திரும்பிப் பார்க்கக் கூடிய வெற்றியாக இருக்கும் என பேசிய அவர்,
புரட்சித் தலைவர், புரட்சித்தலைவி, புரட்சித் கலைஞர் மனிதர்களாக பிறந்து, புனிதர்களாகி தற்போது மேலே இருந்து ஆசீர்வாதம் செய்து கொண்டிருக்கின்றனர் என மேலே சுற்றிய கழுகை சுட்டிக்காட்டி அங்கே பாருங்கள் ஆசீர்வாதம் செய்வதாக தெரிவித்தார்.
.மேலும், நான் எங்கு சென்றாலும் கேப்டன் கருடன் பகவானாக சுற்றி வந்து ஆசிர்வாதம் செய்து கொண்டிருக்கின்றார் என அப்போது அவர் தெரிவித்தார்.
தேர்தல் வந்துவிட்டால் முதலமைச்சருக்கு அரசு ஊழியர்களும், மீதும் ஆசிரியர்களும் ஞாபகத்திற்கு வந்து விடுவார்கள். இதை அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் எத்தனை நாள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போதெல்லாம் அவர்களை சந்திக்காத முதல்வர் இப்போது அவர்களைப் பற்றி பேசுகிறார். காரணம் இன்று வாக்குச்சாவடியில் பணியாற்றக்கூடிய அனைவரும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் அவர்களை ஐஸ் வைப்பதற்காக பேசி வருகிறார்.
வருகிற 19 ஆம் தேதி அனைவரும் வாக்களிக்க செல்ல வேண்டும். ஆனால் யாரும் தாமதமாக சென்று விடாதீர்கள், ஏனென்றால் நடப்பது யாருடைய ஆட்சி என்று உங்களுக்கு தெரியும். திருவாரூர் காரர்கள் சும்மாவே ஆடுவார்கள், தற்போது ஆட்சி பலம், அதிகார பலம், பண பலம், ரவுடி பலம் என அனைத்தையும் இறக்கி ஆடோ ஆடு என்று சலங்கை கட்டிக்கொண்டு ஆடுவார்கள் என தெரிவித்தார்.
இதில் மாவட்ட செயலாளர் பாரதிமோகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராம ராமநாதன், அம்மா பேரவை மாநில இணைச்செயலாளர் ஏவிகே அசோக்குமார், தேசிய முற்போக்கு திராவிட கழகம் மாவட்ட செயலாளர் சங்கர், மாநில பொறுப்பாளர் அன்பு, மாநகர செயலாளர்கள் அழகர், நந்தகுமார், மாநகர பொருளாளர் ஐயப்பன், ஒன்றிய செயலாளர் மதியழகன், பொதுக்குழு உறுப்பினர் சுகுமார், எஸ்டிபிஐ கட்சி மாவட்ட தலைவர் இப்ராகிம், மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.