பொதுமக்கள் பயன் பாட்டிற்காக மாதர்பாக்கத்தில் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் திமுக இளைஞர் அணி சார்பில் நடைப்பெற்ற கோடைக்கால நீர் மோர் பந்தல் திறப்பு விழாவில் அதிமுக முன்னாள் கிளைச் செயலாளர் ராஜா தனது குடும்பத்துடன் திமுகவில் டி.ஜே.கோவிந்தராஜ் முன்னிலையில் இணைத்துக் கொண்டார்.
மாதர்பாக்கம், மே. 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சீனிவாசன்…
மாதர்பக்கத்தில் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் திமுக இளைஞரணி சார்பில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஜெ.மோகன் பாபு ஏற்பாட்டில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நேற்று நடைப்பெற்றது. அதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ. கோவிந்தராஜன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு பழச்சாறு நீர்,மோர் உள்ளிட்ட குளிர்பானங்களை வழங்கினார்.
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றியம் மாதர்பாக்கம் பேருந்து நிலையம் அருகே திருவள்ளூர் கிழக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மாதர்பாக்கம் ஜெ.மோகன் பாபு ஏற்பாட்டில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.
மேலும் அந்நிகழ்விற்கு ஒன்றிய செயலாளர் மணிபாலன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் லோகேஷ், பொதுக்குழு உறுப்பினர் குணசேகரன், ஆகியோர் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளரும் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான டி.ஜெ. கோவிந்தராஜன் கலந்துக் கொண்டு நீர் மோர் பந்தலை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொதுமக்களுக்கும், மாதர்பாக்கம் பகுதியில் உள்ள வியாபாரிகளுக்கும், மேலும் பேருந்துக்காக காத்திருந்த பயணிகள் உள்ளிட்டவர்களுக்கு கோடைக்கால வெப்பத்தைத் தணிக்கும் விதமாக அவர்களுக்கு நீர், மோர், தர்பூசணி, பழச்சாறு உள்ளிட்ட குளிர்பானங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.
அச்சிறப்பு மிகு விழாவில் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் சங்கர், மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் முரளி, பாஸ்கர், இளைஞர் அணியைச் சேர்ந்த சுரேஷ், எஸ்வந்த், மஸ்தான், லோகேஷ், மற்றும் மோகனசுந்தரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் அந்நிகழ்ச்சியின் போது முன்னாள் அதிமுக கிளை செயலாளர் ராஜா தன் குடும்பத்துடன் சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தராஜன் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.