திருவள்ளூர், ஜூன். 08

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகாமை குட்டரங்கில் இன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கிகள் சார்பாக 3,494 பயனாளிகளுக்கு ரூ. 122.03 கோடி மதிப்பீட்டில் விவசாயம், தொழில்,மற்றும் தனிநபர் கடன்களையும், ஜன்சுரக்ஷா என்ற மக்கள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 3009 நபர்களுக்கு பொது காப்பீடு, 3902 நபர்களுக்கு விபத்துகள் காப்பீடு, 733 நபர்களுக்கு ஓய்வூதிய அட்டை மற்றும் உழவர் கடன் அட்டைத்திட்டத்தின் கீழ் 145 விவசாயிகளுக்கு கே.சி.சி அட்டைகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. அநிநிகழ்வில் பங்கேற்ற திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இம் மாபெரும் கடனுதவிகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், மாவட்ட வருவாய் அலுவலர் ( பொ ) எஸ்.கோவிந்தராஜன், இந்தியன் வங்கியின் மண்டல மேலாளர் மோகன்தாஸ், தலைமை அலுவலக உதவிப்பொது மேலாளர் ஏ.மோகன் குமார், பாரத ஸ்டேட் வங்கியின் உதவிப்பொது மேலாளர் ராஜலட்சுமி, யூனியன் வங்கியின் உதவி பிராந்திய மேலாளர் ரவிசங்கர், பேங்க் ஆப் இந்தியா உதவிப்பொது மேலாளர் பழனி, காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி உதவிப்பொது மேலாளர் நாராயணன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் டி.ஏ.சீனிவாசன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் வி.மணிவண்ணன் பல்வேறு வங்கிகளின் மேலாளர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here