நன்னிலம், ஜூலை. 20 –

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள மாப்பிள்ளைக்குப்பம் பகுதியில் பழமையான சொர்ண மகாகாளியம்மன் உள்ளது. இக் கோவிலில் நடைப்பெறும் ஆடிமாத விழாவில் கடந்த 70 ஆண்டுகளுக்கு மேல் காளியாட்டம் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக காளியாட்ட விழா நடைபெறவில்லை இந்த ஆண்டு ஆடிமாத விழாவில் காளியம்மனுக்கு அபிஷேகம் செய்து தீபாராதனை நடைபெற்றது.  அதனை தொடர்ந்து காளியாட்ட விழா வெகு விமர்சியாக நடைபெற்றது. காளியம்மன் வேதமடைந்து முக்கிய வீதிகளில் வலம் வர அவ்வூர் மக்கள் அர்ச்சனை செய்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் மேளதாளங்கள் முழங்க காளியம்மன் நடனமாடியதை பக்தர்கள் பயப்பக்தியுடன் கண்டு வணங்கினர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here