கும்பகோணம், டிச. 07 –

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள செம்மங்குடி ஊராட்சி பகுதியில் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்துத் தரக்கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அப்பகுதியில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், திருவிடைமருதூர் தாலுகாவிற்குட்பட்ட ஏ.செம்மங்குடி ஊராட்சியில் அடிப்படை வசதிகளை செய்துத் தரக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அப்பகுதியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

செம்மங்குடி கடைவீதியில் நடைப்பெற்ற அக்கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு கண்ணன் மற்றும் அழகர்  தலைமை வகித்தனர். இவ்வார்ப் பாட்டத்தில் ராஜி, மனோகரன், சிபிஎம் திருவிடைமருதூர் ஒன்றிய செயலாளர் பழனிவேல், ஒன்றிய குழு உறுப்பினர்கள் தருமையன், முருகன், வீரக்குமார், பிரேம்நாத், வெங்கடேஷ், சத்யராஜ், பவானி, மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி கோரிக்கை முழக்கங்களையும் தொடர்ந்து காலம் தாழ்த்தி வருவதைக் கண்டித்து கண்டன முழக்கங்களையும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் எழுப்பினார்கள்.

மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தில் சேத்திக்குளம் அங்கன்வாடி எதிரேயுள்ள துணை மின் மாற்றி அமைத்து பொதுமக்கள் சிரமத்தை போக்கிட வேண்டும். ஊராட்சி துணை சுகாதார நிலையம் அமைத்திட வேண்டும். பல வருடமாக பழுதடைந்து பார்ப்பதற்கே பாவமான நிலையில் காட்சியளிக்கும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை அகற்றி அதே இடத்தில் புதிய கட்டிடம் கட்டி தர வேண்டும். ஆரியச்சேரி வாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்றி குளம் குட்டைகளுக்கு தங்குத்தடையின்றி நீர் செல்லும் வழி தடமாக மாற்றி அமைத்திட 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் தூர்வாரிட வேண்டும். செம்மங்குடி  வேலங்குடி செல்லும் சாலையினை தார் சாலையாக அமைத்திட வேண்டும். செம்மங்குடி ஊராட்சியில் குடிமனை பட்டா இல்லாதவர்களுக்கு குடிமனை பட்டா வழங்கிட வேண்டும் அனைத்து வார்டுகளிலும் பொதுக் கழிவறை அமைத்திட வேண்டும். மேலத்தெரு சாலையை புதிய சாலையாக செப்பனிட வேண்டும். பழுது அடைந்த தொகுப்பு வீடுகளை அகற்றி புதிய வீடுகளை வழங்கிட வேண்டும் இயங்காத உயர் கோபுர விளக்குகளை சீரமைத்து தர வேண்டும். 100 நாள் வேலையை முழுமையாக வழங்கிட வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை இவ்வார்ப்பாட்டத்தின் போது அவர்கள் வலியுறுத்தினர்கள்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here