ராாமநாதபுரம், ஜூலை 12-
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்ட மக்கள் நலனுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் அரசு நலத்திட்டங்களின் செயல்பாடு குறித்து தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் டாக்டர்  பகவான் லால் சாஹ்னி தலைமையில் துணைத் தலைவர் டாக்டர் லலோகேஷ் குமார் பிராஜபதி உறுப்பினர்கள் ஆசாரி தல்லலோஜூ,  டாக்டர் சதா யாதவ், கவுஷலேந்திரசிங் படேல் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா ஆகியோர் கூட்டத்திற்கு முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர், தமிழ்நாடு அரசு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் மூலம் மாவட்டத்தில் செயல்பபடுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து விளக்கி பேசுகையில்,
பிற்படுத்தப்பட்ட மக்கள் நலனுக்காக மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்திவரும் நலத்திட்டங்கள் அனைத்தும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக பிற்படுத்தப்பட்ட மாணவ மாணவியர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கபட்டு வரகிறது. 2018-2019 ம் நிதியாண்டில் 6 228 ஊரக பகுதிகளிலுள்ள மாணவியர்களுக்கு ரூ.38.85 லட்சம் மதிப்பிலும் ஆங்கில வழி கல்வி பயிலும் 2260 மாணாக்கர்களுக்கு ரூ.5.61 லட்சம் மதிப்பிலும் உயர்கல்வி பயிலும் 5 ஆயிரத்து 744 பயனாளிகளுக்கு ரூ.1.45 கோடி மதிப்பிலும் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும், பிற்படுத்தப்பட்டோருக்கான சாதி சான்றிதழ்கள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை சான்றிதழ்களையும் சிரமமின்றி பெற்று பயனடைய ஏதுவாக இணையதளம் மூலம் விண்ணப்பித்திடும் வசதி நடைமுறைப்படுத்தப்பட்டுளளது.
இவ்வாறு அவர் பேசினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் சுமன், பிற்படுத்தப்பட்ட நல அலுவலர் கயல்விழி, மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் கோபு, மண்டபம் மாவட்ட கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி உட்பட பலர் பங்கேற்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here