கும்பகோணம், பிப். 07 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச்செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் …

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரில் மத்திய அரசின் சாலை போக்குவரத்து தொழிலாளர்களுக்கு விரோதமான புதிய சட்டமான பிஎன்எஸ் 106 / 2 சட்டத்தை திரும்ப பெறு வலியுறுத்தியும், விபத்தில் தொடர்புடைய ஓட்டுநர்களை கிரிமினல் என்று சொல்லாதே 10 வருட சிறையும் 7 லட்சம் அபராதமும் ஓட்டநர்களின் குடும்பத்தினையே கேள்விக் குறியாக்கும் என்பதே நிதர்சனமான உண்மை எனத் தெரிவித்து, அக் கொடியச் சட்டத்தை உடனடியாக மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தியும், மாநில அரசின் ஆன்லைன் அபராதம் மற்றும் வாகன சாலை வரி உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும் கும்பகோணம் தலைமை தபால் நிலையம் முன்பு மாவட்ட சாலை போக்குவரத்து தொழிலாளர் மற்றும் மாவட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ஆட்டோ சங்க நகர தலைவர் சங்கர், தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்ட தலைவர் கண்ணன், சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க மாநில பொருளாளர் பார்த்தசாரதி, சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க மாநில குழு உறுப்பினர் சாமிநாதன் ஆட்டோ சங்கம் மாவட்ட தலைவர் ஜெயக்குமார், நகர செயலாளர் கார்த்தி, தஞ்சை நகர செயலாளர் ராஜா, மற்றும் அனைத்து ஆட்டோ தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிரான கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here