தஞ்சாவூர், மே. 08 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு..

சாலை விபத்தில் சிக்கி ஒருக் காலினை இழந்தாலும் படிப்பில் ஆர்வமுடன் உள்ள தனது மகன் கல்விக்கு உதவி செய்யுங்கள் என கண்ணீர் மங்க தாய் விடுத்த கோரிக்கை செய்தியாக வந்ததை அடுத்து தஞ்சையில் உள்ள தனியார் அறக்கட்டளை ஒன்று மாணவனின் கல்வி செலவுக்காக 50 ஆயிரம் ரூபாய் ரொக்க பணமும், புத்தாடைகள், ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி மளிகை பொருட்கள் வழங்கியது. கண்ணீர் மல்க பெற்று கொண்டவர்  நன்றி தெரிவித்து கொண்டார்.

தஞ்சை மாவட்டம் கண்டியூர் காளியம்மன் கோவில் தெருவில் வசித்து வரும் சசிக்குமார். சத்யா தம்பதியினரின் மூத்த மகன்தான் சபீர் குமார். மேலும் அவருக்கு இரண்டு சகோதரிகள் உள்ளனர். ஓடி ஆடி விளையாடுகிற வயதில் காலினை இழந்து வீட்டிலேயே தனது மகன் முடங்கி கிடப்பதை கண்டு தாய் சத்யா கண்ணீர வடித்துள்ளார்

உடல் நலம் பாதிப்புடன கூலி வேலைக்கு செல்லும் கணவன். அன்றாட வாழ்க்கையை நகர்த்தலே சிரமபடும் குடும்ப நிலை இருந்தாலும் படிப்பில் ஆர்வம் இருந்த தனது மகனை மிகுந்த சிரமத்திற்கு இடையில்  படிக்க வைக்கிறேன் கல்விக்கு உதவி செய்யுங்கள் என கண்ணீர் கோரிக்கை வைத்த செய்தி ஒளிபரப்பானது.

இந்த செய்தியை பார்த்த  தஞ்சையில் உள்ள தனியார் அறக்கட்டளை ஒன்று மாணவனின் கல்வி செலவுக்காக 50 ஆயிரம் ரூபாய் ரொக்க பணமும், புத்தாடைகள், ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி மளிகை பொருட்கள் வழங்கியது. கண்ணீர் மல்க பெற்று கொண்ட மாணவன் குடும்பத்தினர்  கை கூப்பி நன்றி தெரிவித்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here