கும்பகோணம், ஏப். 19 –

போக்குவரத்து சாலை விதிமுறைகளை மீறுவோர் மீது வழக்கு தொடருவது மற்றும் அபராதம் விதிப்பது உள்ளிட்ட பணிகளை போக்குவரத்து அதிகாரிகள் மேற்கொண்டு வருவது அனைவரும் அறிந்த ஒன்று தான். ஆனால் தற்போது இருசக்கர வாகனத்தில் செல்வோருக்கு தான் அதிக அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

இருசக்கர வாகனத்தில் செல்வோர் தலைக்கவசம் அணியாவிட்டால் ரூ. 1000 அபராதம் விதிக்கப்படும் என்ற போக்குவரத்து காவல்துறையினர் அறிவிப்பை தொடர்ந்து வாகன ஓட்டிகள் தற்போது பெரும்பாலும் தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனத்தை ஓட்ட தொடங்கினார்கள்.

இந்நிலையில் இன்று கும்பகோணம் பழைய மீன் மார்க்கெட் அருகில் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் சரவணகுமார் தலைமையில் போக்குவரத்து காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவன் இருசக்கர வாகனத்தில் வந்தார்.

அப்போது அம்மாணவனை வாகனத்தணிக்கையில் ஈடுப்பட்ட போக்குவரத்து காவல்துறையினர் தடுத்து நிறுத்தியபோது, அம்மாணவன் இனி இருசக்கர வாகனம் ஓட்ட மாட்டேன் என்றவாறு அழுத் தொடங்கினார். அதனைத்தொடர்ந்து காவல்துறை ஆய்வாளர் சரவணகுமார் பொறுப்பற்ற வகையில் 11 வயதை நிரம்பிய மாணவனிடம் இரு சக்கரவாகனத்தை கொடுத்து ஓட்டசெய்த அம்மாணவனின் பெற்றோரை வரவழைத்து, சாலையில் ஏற்படும் விபத்துகளை குறைப்பதற்கு போக்குவரத்து விதிமுறை சட்டங்களை மதித்தல் வேண்டும் எனவும், அதனை தாங்கள் ஒழுங்காக கடைப்பிடித்தால் மட்டுமே அடுத்த தலைமுறைகள் அதனை பின்பற்றுவார்கள் எனவும், மேலும் சாலைவிதிகளை பொதுமக்கள் பின்பற்றினால் மட்டுமே சாலை விபத்துகளை குறைக்க முடியும் எனவும், மேலும் இதுப்போன்று சிறு வயது பிள்ளைகளிடம் இருசக்கர வாகனங்களை கொடுத்தனுப்பி பொறுப்பற்ற மனநிலையில் பெற்றோர்களை இருந்தால், தேவையற்ற சாலை விபத்துக்களை தடுக்க முடியாது என்றவாறு அவர்களுக்கு அறிவுறுத்தினார். அதனால் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here