பொன்னேரி, ஏப். 19 –
பொன்னேரி அடுத்துள்ள மாதவரம் பகுதியில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட கட்சி அலுவலகத்தில் அதிமுக தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மேலும், இக்கூட்டத்திற்கு திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பி.பலராமன் தலைமை தாங்கினார். மேலும் இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக சென்னை மண்டலச் செயலாளர் கோவை சத்தியன் வருகை தந்தார் மேலும் அக்கூட்டத்தில் அவர் தகவல் தொழில் நுட்ப நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசணைகளை வழங்கினார்.
மேலும், அக்கூட்டத்தில் அம்மா பேரவை மாநில செயலாளர் பொன் ராஜா, மீஞ்சூர் ஒன்றிய அதிமுக செயலாளர் நாலூர் முத்துக்குமார், பொன்னேரி நகர அதிமுக செயலாளர் செல்வக்குமார், உள்ளிட்டவர்களும் மேலும் அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் மற்றும் அதிமுக கட்சி நிர்வாகிகள் என பலர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.