தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மறைந்த டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, மீஞ்சூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் மிக ஆர்வத்துடன் பங்கேற்ற மாரத்தான் போட்டி நடைப்பெற்றது.

மீஞ்சூர், ஆக. 27 –

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்துள்ள திருவெள்ளைவாயல் பஜார் பகுதியில் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, மீஞ்சூர் தெற்கு ஒன்றிய திமுகவினர் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட மாரத்தான் போட்டி அப்பகுதியில் நடைப்பெற்றது. அதில் மிக ஆர்வத்துடன் அப்பகுதி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள்  அப்போட்டியில் பங்கேற்றனர்.

அவ்விளையாட்டு போட்டிக்கு மீஞ்சூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் காணியம்பாக்கம் ஜெகதீசன் தலைமையேற்று நடத்திட, மீஞ்சூர் ஒன்றிய பெருந்தலைவர் அத்திப்பட்டு ஜி.ரவி, ஊராட்சி மன்ற தலைவர்கள் காட்டுப்பள்ளி சேதுராமன், திருவெள்ளைவாயல் முத்து, வாயலூர் கோபி, மீஞ்சூர் தெற்கு ஒன்றிய நிர்வாகிகள் பாண்டுரங்கன் ,தன்சிங் ,ஸ்டாலின், முனுசாமி ,குமார், குணாளன், பார்த்தசாரதி, மீஞ்சூர் பேரூர் கழக செயலாளர் க.சு.தமிழ் உதயன், உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர்.

மேலும் சிறப்பு அழைப்பாளராக இவ்விழாவில் பங்கேற்ற திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான டி.ஜே. கோவிந்தராஜன், மாரத்தான் போட்டியினை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

திருவெள்ளைவாயல் பஜார் பகுதியில் இருந்து சுமார் ஆறு கிலோ மீட்டர் தூரம்வுள்ள தத்தமஞ்சி கிராமம் வந்தடைந்தது. மேலும் அப் போட்டியில் முதல் ஆறு இடங்களை பிடித்து வெற்றிப்பெற்ற இளைஞர்கள் ஹரி ,ஜனார்த்தனன், சந்துரு, நந்தகுமார், ஆறுமுகசாமி, ஜனா ஆகியோர்களுக்கு மாவட்ட செயலாளர் சிறப்பு பரிசுகளை வழங்கினார்.

மேலும் அப்போட்டி சிறப்பாகவும், பாதுகாப்புடன் நடைப்பெறுவதற்கான நடவடிக்கைகளை காட்டூர் காவல் நிலைய காவல்துறையினரும்,  காட்டூர் மருத்துவத்துறை மருத்துவர்களும் வெகுச்சிறப்பாக மேற் கொண்டனர்.

தொடர்ந்து மாவட்ட செயலாளர் காட்டூர், திருவெள்ளைவாயல் பகுதிகளில் உள்ள திமுக கொடிக்கம்பத்தில் புதிய கட்சி கொடியினையேற்றி அப்பகுதி வாழ் மக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். அவ்விழாவில் அக்கட்சி தொண்டர்கள், கிராம பொதுமக்கள் மற்றும் விளாயாட்டில் ஆர்வமுள்ள திரளானவர்கள் பங்கேற்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here