ஆரம்பாக்கம், பிப். 14 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி…

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் பாட்டை குப்பம் பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீவெங்கடேசபெருமாள் திருகோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.

அக் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பாட்டைகுப்பம் அருகில் உள்ள நொச்சிக்குப்பம், புது குப்பம், பீமார்பாளயம் குப்பம், வெங்கடேச பெருமாள் நகர் குப்பம் உள்ளிட்ட சுமார் 30க்கும் மேற்பட்ட மீனவ கிராம மக்கள் சீர்வரிசையோடு பாட்டைக்குப்பம் பகுதிக்கு வந்து வெங்கடேச பெருமாளை தரிசனம் செய்தனர் .

இந்த நிலையில் இந்து மக்களுக்கு இணையாக  ஆரம்பாக்கத்தை சேர்ந்த செக்குமேடு பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் தாரை, தப்பட்டை, பறையுடன் பாரம்பரிய கலையான சிலம்பம் சுற்றியவாறு இஸ்லாமியர்கள் 20 வகையான தட்டு சீர்வரிசையுடன் வந்து வெங்கடேச பெருமாளுக்கு மரியாதை செலுத்தினர்.

இஸ்லாமியர்களை வரவேற்கும் விதமாக சண்டி மேளம் அடித்து பட்டாசுகள் வெடித்து மீனவ இந்துக்கள் இஸ்லாமியர்களை வரவேற்று சீர்வரிசையை பெற்றுக் கொண்டு நெகிழ்ச்சியை ஏற்படுத்தினார்கள். இந்நிகழ்வு கோவில் கும்பாபிஷேக நிகழ்வைத் தாண்டி மத நல்லிணக்க நிகழ்வாகவே மாறியது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here