கும்பகோணம், ஏப். 08

கும்பகோணம் அருகே உள்ள சக்கராப்பள்ளியில் அருள்மிகு திருதேவநாயகி அம்பாள் சமேத திருசக்கரவாகேஸ்வரர் சுவாமி திருக்கோயில் கோவில் அமைந்துள்ளது.

மேலும், இத்திருக்கோயில் என்பது சுவாமிமலை அருள்மிகு திருசுவாமிநாதசுவாமி கோவிலின் இணை கோவிலாகும். மேலும், திருநாவுக்கரசர் மற்றும் திருஞான சம்பந்தரால் பாடல் பெற்றதுமான இத்திருக்கோயிலின் சப்தஸ்தான விழா கடந்த 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தொடர்ந்து தினந்தோறும் இரவு பல்வேறு விதமான வாகனங்களில் சாமி வீதியுலாவும் நடைபெற்றது. மேலும், விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஏழூர் பல்லக்கு புறப்பாடு  வெள்ளிக்கிழமையான நேற்று அதிகாலை நடைபெற்றது.

மேலும் இந்நிகழ்வில் அய்யம்பேட்டை செளராஷ்டிரா சபைக்கு சொந்தமான கண்ணாடி பல்லக்கில் தேவ நாயகி அம்பாள் சமேத சக்கர வாகேஸ்வரர் சுவாமி எழுந்தருள சக்கரவாகேஸ்வரர் கோவிலில் இருந்து ஏழூர் பல்லக்கு புறப்பட்டது.

அப்போது கோவில் வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனமும், கோபுர தரிசனம் செய்தனர்.  கோவிலில் இருந்து புறப்பட்ட பல்லக்கு அய்யம்பேட்டை எல்லை வரை சென்று மாகாளிபுரம், வழுத்தூர், சரபோஜிராஜபுரம், அரிய மங்கை, சூலமங்கலம், நல்லிச்சேரி, பசுபதிகோவில் ஆகிய கிராமங்களில் வீதியுலா  சென்று இரவு பசுபதிகோவில் குடமுருட்டி ஆற்றில் வாணவேடிக்கை நடைப்பெற்றது.

மேலும், இலுப்பக்கோரை  கிராமத்திற்கு  சென்று மீண்டும் பசுபதிகோவில்,  அய்யம்பேட்டை ஆகிய ஊர்களில் வீதியுலா வருகிறது. இன்று மாலை அய்யம்பேட்டை மதகடி பஜார் அருகே உள்ள அழகு நாச்சியம்மன் கோவில் முன்பாக சுவாமிக்கு பொம்மை பூ போடும் நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற உள்ளது.

மேலும் இவ்விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோவில் நிர்வாகிகள், அய்யம்பேட்டை பேரூராட்சி நிர்வாகத்தினர் மற்றும் ஏழூர் கிராம மக்கள் செய்துள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here