திருவிடைமருதூர், பிப். 19 –

திருவிடைமருதூர் அருகே தடுப்பு சுவர் கட்டும் பணி நடைப்பெற்று வந்த நிலையில், அப்பணிக்கு பயன்படுத்திய கலவை எந்திரம் கவிழ்ந்து கல்லூரி மாணவர் உயிரிழந்தாா். தொடர்ந்து இரண்டுமணிநேர தீவிர முயற்சிக்கு பின் அவரது அவரது மீட்கப்பட்டது.

திருவிடைமருதூர் தாலுகா, மகாராஜபுரம் காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்த முருகையன் எனுபவரின் மகன் சண்முகம் (வயது20). இவர் ஒரு தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு பட்டப் படிப்பு படித்து வருகிறார்.

மேலும் ஏழை குடும்பத்தைச் சேர்ந்த இவர், குடும்ப வருமானத்திற்காக கல்லூரி விடுமுறை நாட்களில் அச்சுற்று வட்டாரப் பகுதிகளில் நடைப்பெறும் கட்டிடப் பணிகளுக்கு சென்று வருவது வழக்கமாக செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் பழியஞ்சியநல்லூர் கீர்த்திமானாறு அருகில் மேல அகலங்கன் வாய்க்கால் சிமெண்ட் தடுப்பு சுவர் கட்டும்பணி நடைப்பெற்று வருகிறது. அப்பணியில் சண்முகம் வேலையில் ஈடுப்பட்டு வந்துள்ளார். அப்போது, கனரக வாகனமான கான்கிரீட் கலவை எந்திரம் கான்கிரீட் கொட்ட வரும்போது நிலை தடுமாறி தடுப்பு சுவர் கட்டிட பணி செய்து கொண்டிருந்த இடத்தில் கவிழ்ந்தது.

இதில் எந்திரத்துக்கு இடையில் சிக்கிய சண்முகம் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவலயறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து 2 கிரேன்கள், ஜே.சி.பி எந்திரங்கள் மூலம் 2 மணி நேரத்துக்கு மேல் போராடி கவிழ்ந்த கனரக வாகனத்தை அப்புறப்படுத்தி சண்முகத்தின் உடலை மீட்டனர்.

அதனைத்தொடர்ந்து உயிரிழந்த சண்முகத்தின் உடல் கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது. விடுமுறை நாளில் வேலை பார்த்து குடும்பத்துக்கு உதவ நினைத்த கல்லூரி மாணவன் உயிரிழந்த சம்பவம் அப் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

மேலும் இச்சம்பவத்தில் உயிரிழந்த கல்லூரி மாணவரின் குடும்பத்திற்கு  இழப்பீடு வழங்க கோரியும், லாரி உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், அரசு மருத்துவமனை முன்பாக அவரது உறவினர்கள் சாலை மறியல் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

அத்தகவலிறிந்து. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவிடைமருதூர் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ஜாபர் சித்திக் காவல்துறை ஆய்வாளர்கள் ராஜேஷ் அழகேசன் மறியில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்பேச்சு வார்த்தைக்கு உடன்பட்டு சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இது குறித்து காவல் துறை தரப்பில் இதுவரை 2 பேரை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டன மேலும் சிலரிடம் விசாரணை நடத்தி  வருவதாக தெரிவித்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here