தரங்கம்பாடி, மே. 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்…
தரங்கம்பாடி அருகே மாமாகுடி கிராமத்தில் அருள்மிகு கோமளாம்பிகை என்னும் இலுப்பை தோப்பிடையாள் காளியம்மன் ஆலயத்தில் மேலதாள வாத்தியங்கள் முழங்க புகழ் வாய்ந்த பச்சைகாளி பவளகாளி 92ம் ஆண்டு உற்சவம் வெகுவிமர்சையாக நடைபெற்றது அவ்விழாவில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கண்டு தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, மாமாகுடி கிராமத்தில் அருள்மிகு கோமளாம்பிகை என்னும் இலுப்பை தோப்படியாள் ஶ்ரீ காளியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் நடைபெறும் காளியாட்ட உற்சவம் மிகவும் பிரசித்தி பெற்றது.
இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் நடைபெறும் காளி ஆட்ட உற்சவம் இன்று நடைபெற்றது. 92வது ஆண்டாக நடைபெறும் உற்சவத்தை முன்னிட்டு கிராமமக்கள் காப்புகட்டி பால்குடம் காவடி எடுத்து மாரியம்மன் காளியம்மன் ஆலயங்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு சந்தனகாப்பு அலங்காரம் நடைபெற்றது.
தொடர்ந்து மாமாகுடி பிள்ளையார்கோவில் ஆலயத்தில் இருந்து அலகுகாவடி அலகு குத்தியும் பக்தர்கள் வீதியுலாவாக ஆலயத்திற்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பெண்கள் மாவிளக்கு ஏற்றி வழிபாடு நடத்தினர்.
விழாவின் முக்கிய நிகழ்வாக பச்சைக்காளி பவளக்காளி திருஉருவத்திற்கு மாரியம்மன் ஆலயத்தில் படையலிட்டு ஊர்வலமாக காளியம்மன் ஆலயத்திற்கு எடுத்து வரப்பட்டது.
ஆலயத்தில் காளியம்மன் கரகம் புறப்பாடு செய்யப்பட்டு காளி ஆட்ட உற்சவம் மேளதாள வாத்தியஙகள் முழங்க தொடங்கியது. பச்சைக்காளி பவளக்காளி ஆகிய இரு அம்மன்களுக்கும் பொதுமக்கள் வேண்டுதலை நிறைவேற்றகோரி மாலை அணிவித்து வணங்கினர்.
பச்சைக்காளி பவளக்காளி ஆக்ரோசத்துடன் திருநடனம் புரிந்தது பக்தர்களை பரவசப்படுத்தியது. 3 மணிநேரம் காளியாட்ம் நடைபெற்றது. பின்னர் காளி ஆட்ட வீதியுலா தொடங்கியது. விடிய விடிய வீதியுலா சென்று நாளை இரவு காளிகள் கோவிலை வந்தடையும்.
காளி ஆட்டத்தை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர். காளி ஆட்டங்களை தங்கள் செல்போனில் படம்பிடித்தனர். பொறையார் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். .





















