மயிலாடுதுறை, மே. 24 –

தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்..

வைகாசி மாத திருவிழாவை முன்னிட்டு அரிவேளூர் அருள்மிகு ஸ்ரீமகா மாரியம்மன் ஆலயத்தின்  27 ஆம் ஆண்டு தீ மிதி திருவிழா வெகுச்சிறப்பாக நடைப்பெற்றது. அவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிப்பட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா அரிவேளூர் கிராமத்தில்    பழமை வாய்ந்த மகா  மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. மேலும்  அவ்வாலயத்தில் ஆண்டு வைகாசி பெருவிழா கடந்த 10 தினங்களுக்கு முன்பு காப்பு கட்டுதலுடன்  துவங்கி நடைபெற்று வருகிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 27 ஆம் ஆண்டு தீமிதி உற்சவம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு காவிரி ஆற்றின் கிளை நதியான கடலாழி ஆற்றின் கரையில் இருந்து சக்தி கரகம் ஊர்வலமாக புறப்பட்டு வந்தது வீடுகள்தோறும் சக்தி கரகத்திற்கு  வழிபாடு செய்தனர். தொடர்ந்து ஆலயத்தின் முன்பு அமைக்கப்பட்டு இருந்த தீக்குண்டத்திற்கு சக்தி கரகம் வந்தவுடன் விரதம் இருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்

அவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here