காஞ்சிபுரம், மே. 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்…
தேசிய அளவிலான 7 வயது முதல் 25 வயது வரையில் உள்ளவர்களுக்கான சிலம்ப போட்டி கோவையில் நடைப்பெற்றது. அதில் பல்வேறு மாநிலம் மற்றும் மாவட்டங்களில் இருந்து சிலம்பாட்டபயிற்சி மாணவர்கள் பங்கேற்றனர். அதனைப்போல் காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா பூங்கா எதிரே அமைந்துள்ள சிலம்பம் பயிற்சி மையத்திலிருந்து 29 மாணவர்கள் அச்சிலம்ப போட்டியில் பங்கேற்றனர்.
அதில் கலந்துக்கொண்ட காஞ்சிபுரத்தை சேர்ந்த அந்த 29 மாணவர்களுமே பல்வேறு சுற்றுகள் நடைபெற்ற போட்டிகளில் தங்கம், வெள்ளி, வெண்கலம் போன்ற பல்வேறு பதக்கங்களை அப்போட்டியில் வென்றெடுத்தனர்.
இந்நிலையில் வெற்றிப்பெற்று பல்வேறு பக்கங்களை வென்று ஊர் திரும்பிய அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக அவர்கள் பயிற்சி பெற்ற காஞ்சி ஸ்போர்ட்ஸ் அகாடமியின் சார்பிலும் அவ்வூர்மக்கள் சார்பிலும் பட்டாசுகள் வெடித்து அனைவருக்கும் மாலைகள் அணிவித்து பேண்டு வாத்தியங்கள் முழங்க சிறப்பான வரவேற்பை வழங்கி வரவேற்றனர்.
மேலும் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளின் பெற்றோர்களும் தங்களது பிள்ளைகளுக்கு மாலைகள் அணிவித்து தங்களது மகழ்ச்சியை வெளிப்படுத்தினர்.