மயிலாடுதுறை, ஏப். 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் …
அருள்மிகு ஸ்ரீகெளரி மாரியம்மன் கோடங்குடி கிராம திருக்கோயில் வயல் வெளியில் நடைபெற்ற தீ மிதி திருவிழாவில், ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் தீ மிதி திருவிழாவில் பங்கேற்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம், கோடங்குடி கிராமத்தில் அமைந்துள்ளது மிகவும் பழைமையான கிராம கோயிலான கெளரி மாரியம்மன் திருக்கோயிலாகும். மேலும் அத்திருக்கோயிலில் ஆண்டு தோறும் சித்திரை திருவிழாவை முன்னிட்டு தீ மிதி உற்சவம் நடைபெறுவது வழக்கமாகும் . அதுப்போன்று இவ்வாண்டும் அவ்விழா இன்று நடைப்பெற்றது. அதில் திறந்த வழல்வெளியில் அமைக்கப்பட்டிருந்த தீ குண்டத்தில் திரளான பக்தர்கள் விரதங்களை கடைப்பிடித்து, பக்தியுடன் தீ மிதித்து தங்களின் வேண்டுதல்களை நிறைவேற்றினார்கள்.
அதனை முன்னிட்டு முன்னதாக அம்மனுக்கு அலங்காரம் செய்விக்கப்பட்டு தீபாராதணைக் காட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து அம்மன் சன்னதிக்கு முன்பாக திறந்த வயல்வெளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தீ குண்டத்தில் இறங்கி தங்களது வேண்டுதலை நிறைவேற்றினார்கள்.
மேலும் பல்வேறு பக்தர்கள் கரகம் ஆடிக்கொண்டும், உடலில் அலகு குத்திக்கொண்டும், மேலும் காவடிகள் சுமந்தவாறு வீதியுலா வந்து வயல் வெளியில் அமைக்கப்பட்டு இருந்த தீ குண்டத்தில் இறங்கி தீ மிதித்தனர். இத் தீமிதி திருவிழாவில் 1000 க்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்துக் கொண்டனர். தொடர்ந்து காளி நடனம், வாண வேடிக்கை நிகழ்ச்சியும் நடைபெற்றது.