பட்டுக்கோட்டை, ஏப். 26 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …

தஞ்சாவூர் மாவட்டம், பிரசித்திப் பெற்ற ஸ்தலங்களில் ஒன்றான பட்டுக்கோட்டை அடுத்துள்ள ஆலத்தூர் அருள்மிகு ஸ்ரீ காருடைய அய்யனார் ஆலய தேரோட்டம் நேற்று மாலை வெகு விமரிசையாக நடைப்பெற்றது அதில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். மேலும் ஆண்களுக்கு இணையாக பெண்களின் தப்பாட்டம் விண்ணை அதிர வைக்க, பெண்கள் கும்மியடித்து பாடல்பாடி அய்யனாரை வழிபட்டனர்.

ஆலத்தூர் சுற்று வட்டார கிராம பொதுமக்களின் காவல் தெய்வமாக திகழ்ந்து வரும், அருள்மிகு காருடைய அய்யனார் ஆலயத்தில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கமாகும்.

அதுபோல் இவ்வாண்டும் சித்திரை திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நாளான நேற்று மாலை தேரோட்டம் வெகுச் சிறப்பாக நடைப்பெற்றது. அதில் நாதஸ்வரம், மேளம் முழங்க ஆண்களுக்கு இணையாக பெண்களின் தப்பாட்டம் விண்ணை அதிர வைக்க கோயில் தேரடியிலிருந்து தேர் புறப்பட்டு கோயிலை சுற்றி வலம் வந்தது. திரளான பக்தர்கள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது திரளான பெண்கள் கும்மி அடித்து கும்மி பாடல் பாடி அய்யனாரை வழிபட்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here