புதுச்சேரி, ஏப். 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்…
புதுச்சேரி சட்டப் பேரவையில் 2.50 லட்சம் ரூபாய் செலவில் நவீன தீ அணைப்பான்கள் பொறுத்தப்பட்டுள்ளது, தீ அணைப்பான்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து சபாநாயகர் செல்வம் முன்னிலையில் தீ அணைப்புத்துறை சார்பில் சட்டப்பேரவை ஊழியர்களுக்கு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
புதுச்சேரி சட்டப்பேரவையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், சட்டப்பேரவையின் பாதுகாப்பை உறுதி செய்ய கடந்த சில மாதங்களுக்கு முன்பு வளாகம் முழுவதும் சிசிடிவி கேமிராக்கள் பொறுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சட்டப்பேரவையில் தீ விபத்துகளை தடுக்க 2.50 லட்சம் ரூபாய் செலவில் நவீன தீ அணைப்பான்கள் வளாகம் முழுவதும் பொறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே நவீன தீ அணைப்பான்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்தும், தீ விபத்து ஏற்பட்டால் எந்த மாதிரியான வழிமுறைகளை மேற்கொண்டு தீயினை அணைக்க வேண்டும் என்பது குறித்து செயல்முறை விளக்கத்தை சட்டசபை ஊழியர்களுக்கு தீயணைப்புத்துறை சார்பில் சபாநாயகர் செல்வம் முன்னிலையில் வழங்கப்பட்டது.
மேலும் செயல்முறை விளக்க நிகழ்ச்சியில் அமைச்சர் ஜெயக்குமார், சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம் உள்ளிட்ட சட்டப்பேரவை ஊழியர்கள் பங்கேற்றனர்.





















