பொன்னேரி, ஏப். 25 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி …

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி மின்வாரிய அலுவலகத்தில் சட்ட மாமேதை புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 133 வது பிறந்தநாள் விழா அவ்வலுவலக வளாகத்தில் நடைப்பெற்றது.

மேலும் அவ்விழாவில் அனைத்து மின் வாரிய செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்களின் கலைக்குழுவினர் பங்கேற்று அவ்விழாவினை சிறப்பித்தனர்.

தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு பரிசுப் பொருட்களை வழங்கினார்கள். அதனைத் தொடர்ந்து ஆதித்தமிழர்  கலைக் குழுவினரின் பாரம்பரிய தப்பாட்டம் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

விழாவின் நிறைவில் அவ்விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் அறுசுவை கொண்ட பிரியாணி  உணவு பரிமாறப்பட்டது. அதில் பா கதிரேசன் வடக்கு திட்ட தலைவர் சி ஐ டி உதவி செயற் பொறியாளர்கள் பன்னீர்செல்வம் சிவசங்கரன் பெருமாள் ஷீலா ஸ்ரீதர் வெங்கடேசன் கன்னியப்பன் மாநில அமைப்பு செயலாளர் டாக்டர் அம்பேத்கர் பணியாளர் பொறியாளர் சங்கம் கோடீஸ்வரன் வெங்கடேசன் பார்த்திபன் காமராசு எல்லப்பன் குமார் அருள்நாதன் ஜீவா உள்ளிட்ட மின்வாரிய முக்கிய நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here