புதுச்சேரி, ஏப். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச்செய்தியாளர் சம்பத்…
பிரான்சிஸ் இருந்து 1914-ம் ஆண்டு மார்ச் 29-ந் தேதி அன்னை மீரா முதல் முதலாக புதுச்சேரிக்கு வந்தார். இங்கு சில காலம் தங்கி விட்டு மீண்டும் பிரான்சிற்கு திரும்பினார். அதன் பின், மகான் அரவிந்தரை ஆன்மிக குருவாக ஏற்றுக்கொண்டு 1920-ம் ஆண்டு ஏப்ரல் 24-ந் தேதி புதுச்சேரி நகரப் பகுதியில் உள்ள அரவிந்தர் ஆசிரமத்தில் நிரந்தரமாக தங்கினார்.
அதன்படி ஆண்டுதோறும் ஏப்ரல் 24-ந் தேதி அன்னை வருகை தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி அரவிந்தர் ஆசிரமத்தில் அரவிந்தர், அன்னை தங்கியிருந்த அறைகள் மற்றும் சமாதி பொதுமக்கள் பார்வைக்காக திறந்து விடப்பட்டது.
அன்னையின் பக்தர்கள் அரவிந்தர், அன்னை சமாதிகளை வணங்கினர். மேலும் ஏராளமான ஆன்மிக சிந்தனையாளர்கள், பக்தர்கள் பங்கேற்று அவர்கள் கூட்டு தியானத்திலும் ஈடுபட்டனர்.



















