புதுச்சேரி, ஏப். 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத் …
புதுச்சேரியில் உள்ள அருள்மிகு கற்பக விநாயகர் கோவிலில் வெகுச்சிறப்பாக நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
புதுச்சேரி முத்தியால் பேட்டை தொகுதிக்குட்பட்ட மகாத்மா காந்தி வீதியில் அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் திருக்கோயில் உள்ளது. இக்கோவிலின் திருப்பணிகள் முடிவடைந்து நிலையில் இன்று கும்பாபிஷேக விழா நடைபெற்றது முன்னதாக யாகசாலையில் இருந்து கடன் புறப்பாடு நடைபெற்றது தொடர்ந்து கோவிலின் கோபுரத்தில் புனித நீரானது ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது இது திரளான பக்தர்கள் பங்கேற்று விநாயகரை தரிசனம் செய்தனர்.



















