காஞ்சிபுரம், ஏப். 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்…
காஞ்சிபுரம் மாவட்டம், வெள்ளகேட் பகுதியில் உள்ள குபேரப்பட்டிணத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள ராஜகுபேரர் திருக்கோயிலின் மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது.
சிவபெருமானிடமிருந்து செல்வத்தின் அதிபதியாக வரம் பெற்றவர் ஸ்ரீராஜகுபேரர். செல்வங்களை வாரி வழங்கக்கூடிய சக்தி வாய்ந்த இவருக்கு காஞ்சிபுரம் குபேரப்பட்டிணத்தில் புதியதாக கோயில் மிகுந்த பொருட்செலவில் கட்டப்பட்டப் பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து அத்திருக்கோயிலில் இன்று கும்பாபிஷேகமும், அதனையடுத்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடைபெறுகின்றது.
கும்பாபிஷேகத்தையொட்டி-3 யாககுண்டங்கள், 151 கலசங்கள் யாகசாலையில் வைக்கப்பட்டு சென்னை வடபழனி கோயில் அர்ச்சகர் சௌந்தர்ராஜன் தலைமையிலான 11 சிவாச்சாரியார்கள் யாகசாலை பூஜைகளை நடத்தினார்கள்.
யாகசாலை பூஜைகள் நேற்று மாலையில் தொடங்கியது. கும்பாபிஷேக ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அறங்காவலர் ராஜகுபேர சித்தர் சுவாமிகள் தலைமையிலான விழா குழுவினர் செய்து இருந்தனர்.