புதுச்சேரி, ஏப். 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்…
நடைபெற இருக்கின்ற 2024- ஆண்டிற்கான பாராளுமன்றத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்தில் சுயேட்சையாக போட்டியிடுகின்ற வேட்பாளர் மாஸ்கோ வாளி சின்னத்தில் போட்டியிடுகிறார்.
தொடர்ந்து பல்வேறு பகுதிகளுக்கு சென்று வாளி சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்து வந்தார். அதன் ஒரு பகுதியாக இன்று வில்லியனூர் பெரிய கோவிலில் தனது பிரச்சாரத்தை நூதமான முறையில் தொடங்கினார். இதில் சுயேச்சை வேட்பாளர் மாஸ்கோ வாளி சின்னத்திற்கு ஓட்டளிக்க வேண்டி பொதுமக்களிடம் பிச்சை ஓட்டுக் கேட்டு நூதனமான முறையில் வாக்குகளை சேகரித்தார்.
மேலும் தலையில் வாளியை வைத்துக் கொண்டும், தனது உடம்பில் புதுச்சேரி மக்கள் வாளி சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்றும், தனது உடம்பில் பதாகைகளை கட்டிக்கொண்டு கையில் தட்டுடன் வாளி சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டி பிச்சை ஓட்டுக் கேட்டு வாக்குகளை சேகரித்தார்.
மேலும் என்னைப் போன்ற ஏழை குடிமகனை தேர்ந்தெடுத்தால் நிச்சயம் உங்களுக்கு உதவும் வகையில் எனது பணியை ஆற்றுவேன் என்றும் கேட்டுக்கொண்டார்.