காஞ்சிபுரம், ஏப். 08 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் ..
காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளருக்கு கிரேன் மூலம் மிகப்பெரிய மாலை அணிவித்து உற்சாக வரவேற்பினை அக்கட்சியினர் அளித்தனர்.
மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது . பிரச்சாரத்திற்கு குறைந்த நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், முக்கிய கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவ்வகையில் இன்று காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட அதிமுக வேட்பாளர் ராஜசேகர் வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட 30க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் வாக்குகளைக் கேட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட அய்யம்பேட்டை, முத்தியால்பேட்டை, கருக்குபேட்டை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிமுக வேட்பாளர் ராஜசேகர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார் . வில்லிவலம் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர் ராஜசேகருக்கு கிரேன் மூலம் மிகப்பெரிய மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மேலும் 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் இருசக்கர வாகனங்களில் ஊர்வலமாக வந்து சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தனர்.





















