சென்னை, மார்ச். 29 –

தம்பட்டம் செய்திகளுக்காக ராஜகுமார்

சென்னை நந்தனம் அரசு ஆடவர் கலைக் கல்லூரி இயற்பியல் துறை சார்பாக பொருண்மை அறிவியலில் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்த தேசிய கருத்தரங்கம் ஏ.பி.ஜே.அப்துல்கலாம்‌ அரங்கில் நடைபெற்றது.

அந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ஜோதி வெங்கடேஸ்வரன் தலைமை தாங்கி உரை நிகழ்த்தினார். இயற்பியல் துறையின் முதுகலை மற்றும் ஆராய்ச்சித் துறை இணைப் பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர் டாக்டர் ஜி. பிரபாகரன் வரவேற்புரை‌ நிகழ்த்தினார்.

மேலும் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற பெங்களூர் பல்கலைக் கழக இயற்பியல் மற்றும் மின்னணுவியல் துறை‌ உதவிப் பேராசிரியர் டாக்டர்‌ எம்.கிருஷ்ணகுமார் கலந்து‌ கொண்டு ஆற்றல்‌ சேமிப்பிற்கான  2டி  கார்பன் பொருட்களின் மேற்பரப்பு மாற்றங்கள் தேவைகள் குறித்து உரை நிகழ்த்தினார்.

பாண்டிச்சேரி பல்கலைக் கழக நானோ‌ அறிவியல் மற்றும் தொழில் நுட்ப மையத்தின் இணைப் பேராசிரியர் டாக்டர் ஜே செந்தில் செல்வன்‌  “லேசர் பொருட்கள் செயலாக்கம்” என்றத் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

நிறைவாக  முதுகலை மற்றும் ஆராய்ச்சித் துறை இயற்பியல் துறை இணைப் பேராசிரியர் டாக்டர் அமலா ஜெயந்தி நன்றி கூறினார்.‌‌ இந்நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர் ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here