திருத்துறைப்பூண்டி,மார்ச். 18 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச்செய்தியாளர் கே.நாகராஜ்
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் மிகவும் பிரபலமானதும் சக்தி வாய்ந்த தெய்வமாகவும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ முள்ளாட்சி மாரியம்மன் ஆலயத்தின் 80 ஆம் ஆண்டு பங்குனி திருவிழா நடைப்பெற்று வருகிறது. மேலும் அவ்விழாவின் முக்கிய விழாவாக தீ மிதி திருவிழா திகழ்ந்து வருகிறது. அதனை முன்னிட்டு பல லட்சக்கணக்கான பக்தர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்து பங்கேற்ற அவ்விழா மிகவும் சிறப்பாக நடைப்பெற்றது. விமரிசையாக நடைபெற்றது.
மேலும் அவ்விழாவிற்காக திரளான பக்தர்கள் காப்பு கட்டி கொண்டு அருகே உள்ள ஆற்றங்கரையில் இருந்து சக்தி கரகம் மற்றும் அலகு காவடி எடுத்து திருத்துறைப்பூண்டியின் முக்கிய நகர வீதிகளின் வழியாக வலம் வந்த நிலையில் காலை முதலே பக்தர்கள் காவடிகள் பால்குடங்கள் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து மாலை நடைபெற்ற தீமிதி திருவிழாவில் திரளான பக்தர்கள் பால்குடம் காவடி எடுத்து வந்து 3000 திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தீக்குண்டம் இறங்கி தங்களுடைய நேர்த்தி கடனை அம்மனுக்கு செலுத்தினர். அவ்விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் செயல் அலுவலர் முருகையன் வெகுச்சிறப்பாக செய்திருந்தார். மற்றும் நகர காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் அவ்விழாவிற்கான பாதுகாப்பை சிறப்பாக செய்து உறுதிப் படுத்தியிருந்தனர் அதனால் அவ்விழாவில் பங்கேற்ற லட்சக்கணக்கான பக்தர்கள் மிகுந்த பாதுகாப்புடன் அம்மனை வணங்கி வழிப்பட்டுச் சென்றனர்.





















