திருவாலங்காடு, மார்ச். 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்
திருவள்ளூர் மாவட்டம், திருவலாங்காடு அடுத்துள்ள பாகசாலை கிராமத்தில் பகுதியில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் இளைஞர்கள் அங்கு விளையாடிக் கொண்டிருந்த போது, காலில் ஏதோ இடிபட்டதை தொடர்ந்து அது என்னவென்று பள்ளம் தோண்டி பார்த்துள்ளனர்.
அப்போது அவ்விடத்தில் மணலில் புதைந்திருந்த சுமார் மூன்று அரை அடி உயரம் கொண்ட கருங்கல்லால் ஆன முருகன் சிலை கண்டெடுத்துள்ளனர். மேலும் அதுக்குறித்து அவர்கள் உடனடியாக அந்த கிராம ஊராட்சி மன்ற தலைவருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
ஊராட்சி மன்ற தலைவர் வட்டாட்சியருக்கு தகவல் தெரிவித்தார் பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த வட்டாட்சியர் மதியழகன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் முருகன் சிலையை மீட்டு திருத்தணி வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள ஆவண காப்பகத்தில் பத்திரமாக சிலையை ஒப்படைத்தனர். மேலும் அச்சிலை எப்படி அங்கு வந்த தெனவும், எந்த ஆலயத்திற்கு சொந்தமானது எனவும், மேலும் அச்சிலை வடிவமைக்கப்பட்ட காலங்கள் குறித்து தொல்லியியல் துறையினரின் ஆய்வுக்கு பின்பு தெரிய வரும் எனத் தகவல்கள் தெரிய வருகிறது.



















