புதுச்சேரி, மார்ச். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்
புதுச்சேரி அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட அமைச்சர் சந்திர பிரியங்காவிற்கு பதிலாக புதிய அமைச்சராக காரைக்கால் வடக்கு தொகுதி எம்எல்ஏ திருமுருகன் இன்று பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
புதுச்சேரியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் என்.ஆர். காங்கிரஸ் கட்சியில் அமைச்சராக இருந்த காரைக்காலைச் சேர்ந்த சந்திரப்பிரியங்காவை அப்பதவியில் இருந்து முதல்வர் ரங்கசாமி கடந்த ஆண்டு நீக்கினர். மேலும் அவர் வகித்து வந்த போக்குவரத்துத்துறை உள்ளிட்ட துறைகள் முதலமைச்சரே கூடுதலாக கவனித்து வந்த நிலையில் காலியாக இருந்த அமைச்சர் பதவியை நிரப்ப முடிவு செய்யப்பட்டு அதற்காக காரைக்கால் வடக்குத் தொகுதியை ச்சேர்ந்த திருமுருகனுக்கு அமைச்சர் பதவி வழஙக முதலமைச்சர் ரங்கசாமி குடியரசு தலைவருக்கு பரிந்துரை செய்திருந்தார்.
இந்நிலையில் முதலமைச்சர் ரங்கசாமியின் பரிந்துரையை ஏற்று புதிய அமைச்சராக திருமுருகன் தேர்ந்தெடுக்கப்பட்டு அதற்கான ஒப்புதலை குடியரசுத் தலைவர் வழங்கினார் அதனைத் தொடர்ந்து அவர் பதவியேற்பு விழா ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்றது
இதில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்துக்கொண்டு புதிய அமைச்சராக திருமுருகனுக்கு பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார் இந்நிகழ்ச்சியில் முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டு புதிய அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்ட திருமுருகனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
மக்களவை தேர்தலுக்கு முன்பாக காரைக்கால் மாவட்டத்திற்கு பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில் திருமுருகனுக்கு முதல்வர் ரங்கசாமி அமைச்சர் பதவியை வழஙகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.