திருவாரூர், மார்ச். 07 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ்

திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியம், கீழ எருக்காட்டூர் ஸ்ரீ மகா மாரியம்மன் திருக்கோவில் மற்றும் ஶ்ரீ செல்வ விநாயகர் திருக்கோயில் குடமுழக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. அக் குடமுழக்கு விழாவில் 3000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியம், கீழ எருக்காட்டூர் கிராமத்தில் பலக் காலங்கள் பழமை வாய்ந்த ஸ்ரீ மகா மாரியம்மன் திருக்கோவில் மற்றும் ஸ்ரீ செல்வ விநாயகர் திருக்கோவில் அமைந்துள்ளது.

மேலும் அத்திருக்கோவில்களுக்கு குடமுழுக்கு விழா நடத்துவதென அவ்வூர் மக்கள் முடிவு செய்தார்கள். அதன்படி சிறப்பாக இரண்டு கோவில்களும் புனரமைக்கப்பட்டு கடந்த மூன்று நாட்களாக பல்வேறு கட்டங்களாக யாகசாலை பூஜைகள் நடைபெற்று. அதனைத் தொடர்ந்து இன்று அத்திருக் கோயில்களுக்கான குடமுழக்கு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

மேலும் அக்குடமுழக்கு விழாவில் 3000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அவ்விழாவினை மேலும் சிறப்பித்தனர். அச்சிறப்பு மிகு திருவிழாவிற்கு உள்ளூர் காவல்துறையினர் பாதுகாப்பினை வழங்கினார்கள்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here