சீர்காழி, மார்ச். 06 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்

எங்களுக்கு சின்னத்தில் எல்லாம் நம்பிக்கை இல்லையெனவும், ஆண்டாண்டு காலமாக உதயசூரியன் இரட்டை இ|லை என மக்களை திசை திருப்பி உள்ளார்கள். எங்களது சின்னமே எங்கள் அண்ணன் சீமான்தான் என நாம் தமிழர் கட்சி மயிலாடுதுறை பாராளுமன்ற வேட்பாளர் காளியம்மாள் சீர்காழியில் பேட்டியளித்தார்.

மயிலாடுதுறை பாராளுமன்ற நாம் தமிழர் கட்சி வேட்பாளர் காளியம்மாள் சீர்காழியில் அவரது பிரச்சாரத்தை துவங்கிய நிலையில், சீர்காழி நகரப் பகுதியில் அமைந்துள்ள தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவித்த காளியம்மாள் பின்னர் தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த காளியம்மாள் தெரிவிக்கும் போது,

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக நான் போட்டியிடுகிறேன். சிறு வயது முதல் இந்த மண்ணில் பல்வேறு  பொதுமக்கள் பிரச்சினைகளை பார்த்து வருகிறேன். இந்த மண்ணில் வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்ற அதிமுக, காங்கிரஸ், திமுக கட்சியை சார்ந்த வெற்றி பெற்றவர்களாலும்  இந்த பகுதி மக்களின் பிரச்சினைகள் தீர்ந்த பாடில்லை. அதுவும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற திமுக எம்.பி. காணவில்லை என்று சுவரொட்டிகளை காண முடிகிறது. என்ற அவர் மேலும் இவ்வளவு பிரச்சினைகள் உள்ளபோது காவிரி பிரச்சனை, ஹைட்ரோ கார்பன்,  ஆகிய பிரச்சினைகளுக்கு இவர்கள் பாராளுமன்றத்தில் பேசப்போவதில்லை. அதனால்  நம் பிரச்சனைக்கு நாம்தான் குரல் கொடுக்க வேண்டும் என மக்களின்  ஒருவராக சாதாரண குடும்பத்தில் பிறந்த நான் இந் தொகுதியில் போட்டியிடுவதாக அப்போது தெரிவித்தார்.

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இந்த அரசு கொடுக்கவில்லை. வளம் சார்ந்த தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளது. இதனை நெறிப்படுத்தினாலே இப்பகுதியில் பொருளாதார பிரச்சனை, விவசாய பிரச்சனை, இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு பிரச்சனைகள் தீர்க்கப்படும். என்றார் அவர்.

மேலும் இப்பகுதியில் பகுதி நிலம் வளம் சார்ந்த தொழிற்சாலைகள், பால் பண்ணைகள், பஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளது. அவைகள் திறக்கப்பட்டு வேலைவாய்ப்பு வழங்கிட உறுதி செய்வோம். 100 நாள் வேலை திட்டத்தில் வருடத்திற்கு ஆறு நாள் மட்டுமே வேலைகள் வழங்கப்படுகிறது. பெண்களுக்கான வேலை வாய்ப்பு உறுதி செய்ய வேண்டும். கடற்கரை பகுதியில் மக்களுக்கான அடிப்படை வசதிகள் இன்னும் செய்து தரப்படவில்லை. கடலில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு 4.5 லட்சம் ஹெக்டேர் கடல் பரப்பை விற்று விட்டதாக  கூறுகிறார்கள்.என்றார் வேட்பாளர் காளியம்மாள்.

மேலும் அப்பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இதுவரை பேசவில்லை எனவும்,. மேலும் காவிரியில் குறுக்கே அணைக்கட்டுவோம் என கர்நாடக  எம்.பி. கூறுகிறார். ஆனால் திமுக எம்.பிக்கள் 39 பேரும் இது குறித்து எதுவுமே பேசவில்லை.என குற்றம் சாட்டினார்.

தேர்தலில் 6.7 விழுக்காடு வாங்கியுள்ள கட்சி கூடுதலாக 1.3 விழுக்காடு வாங்கி இருந்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாறக் கூடிய ஒரு கட்சி ஐந்து தேர்தல்களை எதிர் கொண்டுள்ளோம் இரண்டு தேர்தல்களை எதிர்கொண்ட மக்கள் நீதி மையத்திற்கு டார்ச் லைட் சின்னத்தை கொடுத்த தேர்தல் ஆணையம். நாம் தமிழர் கட்சிக்கு ஏன் பாரபட்சம் காட்டுகிறது என வினா எழுப்பினார்.

மேலும் இப்பிரச்சினையில் பாஜக திட்டமிட்டு  தேர்தல் ஆணையம் மூலம் சின்னத்தை முடக்கி வைத்துள்ளனர். என குற்றம் சாட்டினார். இ.டி ரெய்டு  நடத்தி மிரட்டி பார்த்தனர். தற்போது சின்னத்தை முடக்கி வைத்துள்ளனர். விவசாயி சார்ந்த பிரச்சினைகள்,மக்கள் பிரச்சனைகளை பேசி தமிழகத்தில மூன்றாவது இடத்திற்கு நாம் தமிழர் கட்சி வந்துள்ளதாக தெரிவித்தார்.

அதனை ஏற்றுக் கொள்ள முடியாத பாஜக தமிழகத்தில் தான் பெரிய கட்சியாக மக்களிடம் காட்ட வேண்டும் என்பதற்காக நான்காவது இடத்தில் இருந்து முன்னேறுவதற்காக  இவ்வாறு பாஜக திட்டமிட்டு இந்த வேலையை செய்துள்ளது. எனவும், நாடாளுமன்றத் தேர்தல் சட்டமன்றத் தேர்தல் உள்ளாட்சித் தேர்தல்களை ஒரு சின்னத்தில் நாங்கள் அணுகியுள்ளோம் என்றார் அவர்.

ஆனால்  இரண்டு வருடங்களே  ஆன ஒரு கட்சிக்கு அந்த சின்னத்தை ஒதுக்கி உள்ளனர். மூன்று ஆண்டுகளுக்கு குறைவான கர்நாடகத்தில் உள்ள ஒரு லெட்டர் பேடு கட்சிக்கு அந்த சின்னத்தை ஒதுக்கி உள்ளனர். முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கீடு செய்ததாக கூறும் தேர்தல் ஆணையம்  எத்தனை நிமிடங்கள் முன்னுரிமை என வெளிப்படையாக கூற வேண்டும். என தேர்தல் ஆணையத்திற்கு கேள்வி எழுப்பினார்.

மேலும் முதலில் எங்களுக்கு சின்னத்தின் மீது நம்பிக்கை இல்லை எனவும். ஆண்டாண்டு காலமாக உதயசூரியன், இரட்டை இலை சின்னங்களை வைத்து மக்களை திசை திருப்பி வைத்திருந்ததோடு, இது நல்ல கட்சியா,  நல்ல வேட்பாளரா , மக்களுக்கு நன்மை  செய்வார்களா என எதுவும் பார்க்காமல் சின்னம்தான் பிரதானம் என வைத்திருக்கின்றனர்.

ஆனால் எங்களுக்கு சின்னமே எங்கள் அண்ணன் சீமான்தான். தேர்தல் ஆணையம் கூறியது போல் ஜனநாயகத்தின் மீது பற்று கொண்டு விவசாயிக்கு பாதுகாப்பாக உள்ள நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம் இயற்கையாகவே கிடைத்திருந்தது. அதனை பாஜக அபகரித்து  வைத்துக் கொண்டுள்ளது. சீப்பை மறைத்தால் கல்யாணம் நின்று விடும் என நினைக்கிறார்கள்.  எங்களுடைய சின்னமாகவும், எங்களுடைய அடையாளமாகவும் எங்களுடைய தலைவர் உள்ளார் .என தெரிவித்தார்.

எந்த சின்னத்தை எங்களுக்கு வழங்கினாலும் இரண்டே மணி நேரத்தில் அச்சின்னத்தை மக்களிடம் எடுத்துச் செல்லும் திறன் படைத்தவர்கள் மிக ஆவேசமாக தெரிவித்தார்.

பேட்டி: காளியம்மாள், நாம் தமிழர் கட்சி மயிலாடுதுறை பாராளுமன்ற வேட்பாளர். சீர்காழி

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here