மயிலாடுதுறை, மார்ச். 06 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, திருக்கடையூரில்  தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி சமேத ஶ்ரீ அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. மேலும் அத்திருக்கோயில் தேவாரப் பாடல் பெற்ற இங்கு மார்க்கண்டேயருக்காக  சிவபெருமான் கால சம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி எமனை வதம் செய்ததால் அட்ட வீரட்ட தலங்களில் ஒன்றாக அத்திருத்தலம் திகழ்ந்து வருகிறது.

மேலும் அங்கு சிறப்பு ஹோமங்கள் நடத்தி  சுவாமி அம்பாளை வழிபட்டால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஐதீகம். இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலுக்கு  தமிழக முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் சுவாமி தரிசனம் செய்ய அங்கு வருகை தந்தார்.

மேலும் கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் கோவிலுக்குள்ளே சென்று கள்ள வார்ண விநாயகர், ஸ்ரீ காலசம்கார மூர்த்தி, ஶ்ரீ அமிர்தகடேஸ்வரர் மற்றும் அபிராமி அம்மன் சன்னதியில் சென்று சிறப்பு வழிபாடு செய்தார்.

அதனைத் தொடர்ந்து, கோவிலுக்கு வத்திருந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி பொங்க துர்கா ஸ்டாலின் உடன் செல்ஃபி மற்றும் புகைப்படம் எடுத்துக் மகிழ்ந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here