புதுச்சேரி, மார்ச். 02 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்…

உலக சுகாதார நிறுவனம் ஆண்டு தோறும் மார்ச் மாதம் 3-ஆம் தேதியை உலக முழுவதும் செவித்திறன் நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதனை முன்னிட்டு புதுச்சேரி இந்திரா காந்தி அரசு பொது மருத்துவ மனையில் காது, மூக்கு, தொண்டை பிரிவு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் விழிப்புணர் பேரணி நடைபெற்றது.

மனநிலையை மாற்றுவோம் செவி மற்றும் செவித்திறனை அனைவருக்கும் நிச்சயம் ஆக்குவவோம் என்ற தலைப்பில் சுகாதாரத்துறை அலுவலகம் முன்பு தொடங்கிய விழிப்புணர்வு பேணியை இந்திய மருத்துவ சங்கத்தின் புதுச்சேரி பிரிவின் தலைவர் சுதாகர், இஎஸ்ஐ மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் சீனுவாசன் மற்றும் உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி ரவி ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

அதில் மருத்துவ கல்லூரிகளை சேர்ந்த முதுநிலை மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் மற்றும் பல்வேறு செவிலியர் கல்லூரிகளைச் சேர்ந்த 180-க்கும் மேற்பட்ட செவிலியர் கல்லூரி மாணவ மாணவிகள் என திரளானவர்கள் அப்பேரணியில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். காது கேளாமை செவித்திறனை பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து பதாகைகளை கையில் ஏந்தியவாறு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here