திருவாரூர், பிப். 19 –
தம்பட்டம் செய்திகளுக்காக திருவாரூர் மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ்..
திருவாரூரில் அனைத்து இந்திய மாணவர் பெருமன்றத்தின் சார்பில் தேசிய கல்விக் கொள்கையை திரும்ப பெற வலியுறுத்தி ஐந்து கோடி கையெழுத்து இயக்கம் எடுத்துக்கொண்ட பணியினை சிறப்பாக நடத்திட முதல் கையெழுத்திட்டு நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் துவக்கி வைத்தனர்.
திருவாரூரில் அனைத்து இந்திய மாணவர் பெருமன்றத்தின் சார்பில் தேசிய கல்விக் கொள்கையை திரும்பபெற வலியுறுத்தியும் மாணவர் கல்வி விரோத போக்கை கண்டித்தும் பெருமன்றத்தின் சார்பில் ஐந்து கோடி கையெழுத்து இயக்கம் திருவாரூர் பழைய பேருந்துநிலையம் அருகில் மாவட்ட செயலாளர் வீரபாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
அக் கையெழுத்து இயக்கத்தினை நாகை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.செல்வராஜ், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டிகலைவாணன் திருத்துறைப்பூண்டி சட்டமன்றஉறுப்பினர் க.மாரிமுத்து. இந்தியகம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் செல்வராஜ், ஒன்றிய செயலாளர் நாகராஜன். ஆகியோர் கையெழுத்துவிட்டு துவக்கி வைத்தனர்.
மேலும் இந்நிகழ்ச்சியில், ஏ.ஐ.வொய்.எஃப். (AIYF) மாவட்ட செயலாளர் அருள்ராஜன், மாவட்டத்தலைவர் பாலசுப்பிரமணியன், மாவட்டபொருளாளர் கோபி, மாவட்டத் துணைத்தலைவர்கள் சிவனேஷ், கனகராஜன், அருண், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து உரத்த முழக்கங்களை எழுப்பினார்கள்.























