மயிலாடுதுறை, பிப். 17 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்..

மயிலாடுதுறை மாவட்டம், மன்னம்பந்தல் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இருவேறு இடங்களில் நியாயவிலைக் கடைகள் கட்டித்தர அக்கிராம மக்கள் தொடர் கோரிக்கை வைத்தனர்.

அக்கோரிக்கையின் அடிப்படையில், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ஊராட்சி அலுவலகம் அருகில் ரூ.9.16 லட்சம் மதிப்பீட்டில் பகுதிநேர அங்காடியையும் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் நியாய விலை அங்காடி ஆகிய 2 நியாய விலை கடைகளுக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டு முழுமையான பணிகள் நிறைவடைந்த நிலையில் அதற்கான திறப்பு விழா இன்று ஊராட்சித் தலைவர் பிரியா பெரியசாமி தலைமையில் நடைபெற்றது.

மேலும் அச் சிறப்புமிகு நிகழ்ச்சியில் மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினர் ராஜகுமார் கலந்துக் கொண்டு நியாய விலைக்கடைக் கட்டடங்களை திறந்து வைத்து பயனாளிகளிடையே உரை நிகழ்த்தினார்.

அந்நிகழ்வில் மாவட்டக்குழு உறுப்பினர் குமாரசாமி உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் அப்பகுதி பொது மக்கள் என திரளானவர்கள் பங்கேற்று அவ்விழாவிற்கு மேலும் சிறப்புச் சேர்த்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here