கும்பகோணம், பிப். 17 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்..

புதுக்கோட்டை அருகே கடந்த பிப் 14 ஆம் தேது வி.சி.க. சார்பில் நடைப்பெற்ற போராட்டத்தில் மர்ம நபர்கள் சிலர் பெட்ரோல் குண்டு வீசியதாகவும், அதில் விசிக வைச் சார்ந்த மாவட்ட அளவில் பொறுப்பில் இருக்கும் அப்பெண் நிர்வாகியின் சேலையில் அவ்வெடிக்குண்டு தீ பொறி பட்டு ஒரு பகுதி கருகியதாகவும் மேலும் பலர் மீது அப்பொறி பட்டதாகவும் தெரிய வருகிறது.

இந்நிலையில் அச்செயலை கண்டிக்கும் வகையிலும் மேலும் அத் தீய செயலில் ஈடுப்பட்ட குற்றவாளி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தஞ்சாவூர்மாவட்டம், கும்பகோணம் மாநகரில் உள்ள காந்திப் பூங்கா முன்பு நேற்று வி.சி.க. வின் மாவட்ட செயலாளர் முல்லைவளவன், தலைமையில் ‌ கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மண்டல செயலாளர் விவேகானந்தன், மண்டல துணைச் செயலாளர் முருகதாஸ், அண்ணல் அம்பேத்கர் போக்குவரத்து கழக பேரவை பொதுச் செயலாளர் அண்ணாதுரை, மாநில தொண்டரணி துணைச் செயலாளர் செல்வம், விவசாயி அணி மாநில துணைச் செயலாளர்கள் நாகப்பன், முருகேசன்,  நாடாளுமன்ற தொகுதி துணை செயலாளர் அரசமுதல்வன், ஒன்றிய செயலாளர்கள் சசிகுமார், விடுதலை செல்வன், காசி தமிழ், சிவனேசன், விவசாய அணி மாவட்ட அமைப்பாளர் பாலகுரு, தொண்டரணி மாவட்ட துணை செயலாளர் வினோபா, மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள்.

மேலும் அக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தெரிவிக்கும், கடந்த பிப் 14 ஆம் தேதியன்று புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அடுத்த மழையூர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று வரும் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த பள்ளி மாணவனை, மாற்று சமூகத்தைச் சார்ந்தவர்களால் தாக்கப்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து அச்செயலைக் கண்டித்தும், மேலும் பள்ளி மாணவன் மீது தாக்குதல் நடத்திய நபர்களை கைது செய்யக் கோரியும், விசிக சார்பில் அன்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதாக தெரிவித்தார்.

மேலும் அந்த ஆர்ப்பாட்டத்தின் போது, மர்ம நபர்கள் சிலர் போராட்ட களத்தில் வைக்கப்பட்டிருந்த ஒலிபெருக்கிகளின் வயர்களை துண்டித்தும், கூட்டத்திற்குள் பெட்ரோல் குண்டு வீசியதாக தெரிவித்தார். மர்ம நபர்கள் வீசிய அப் பெட்ரோல் குண்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த விசிக மாவட்டச் செயலாளர் இளமதி அசோகன், மண்டல செயலாளர் சதா சிவகுமார், ஒன்றிய செயலாளர் செல்வரத்தினம் உள்ளிட்டோர் மீது விழுந்ததாகவும், அதில் இளமதி அசோகன் அணிந்திருந்த சேலையின் ஒரு பகுதி தீப்பிடித்து எரிந்ததாகவும் மேலும் தெரிவித்தார்.

அதனைக் கண்டிக்கும் வகையிலும் மேலும் குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்க கோரியும் கும்பகோணம் மாநகரத்தில் அமைந்துகாந்திப் பூங்கா முன்பு  விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் ண்டன ஆர்ப்பாட்டம் நடை பெறுவதாக அப்போது தெரிவித்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here