திருவள்ளூர், பிப். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் …
திருவள்ளூர் முதல் பென்னாலூர்பேட்டை செல்லும் தடம் எண் 41 என்ற அரசு பேருந்தை நேற்றைய முன் தினம் மதியம் திருவள்ளூர் பேருந்து நிலையத்திலிருந்து 20 மேற்பட்ட பயணிகளை ஏற்றுக் கொண்டு பென்னாலுர்பேட்டை நோக்கி ஓட்டுனர் ஹேமநாதன் (30 ) பேருந்தை ஓட்டி சென்றுள்ளார்.
அப்போது பூண்டி அடுத்த வெள்ளத்துக்கோட்டை நோக்கி பேருந்து சென்று கொண்டிருந்தபோது ஹேமநாதனுக்கு திடீரென்று வலிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து பேருந்தை ஓட்ட முடியாமல் தடுமாறிய அவர் விபத்து ஏற்படாமல் பயணிகளைக் காப்பாற்றும் வகையில் நிறுத்த முயற்சித்துள்ளார். ஆனால் சிறிது நேரத்தில் பேருந்தை ஒட்டியவாறு மயங்கி விழுந்த அவர் பேருந்து சாலை அருகில் இருந்த கல்வெட்டு மோதி நின்றுள்ளது.
அதைத்தொடர்ந்து பயணிகள் 108 ஆம்புலன்ஸ் போன் செய்து வரவைத்து அவரை திருவள்ளுர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியில் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
அதை தொடர்ந்து அவர் உடல் பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் அருகே ஓடும் பேருந்தில் ஓட்டுனருக்கு வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.





















