பாதிரிவேடு, பிப். 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி …
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பாதிரிவேடு போலீசார் மாதர்பாக்கம், மாநெல்லூர், பூதூர் சத்தியவேடு சாலை, கரடிபுத்தூர், கண்ணன்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து குட்க விற்பனை செய்து வருவதைத் தொடர்ந்து அப்பகுதிகளில் பாதிரிவேடு காவல்துறையினர் நடத்திய அதிரடிச் சோதனை நேற்று நடைப்பெற்றது.
காவல்துறையினர் நடத்திய அச்சோதனையில் ஆங்காங்கே பொட்டி கடைகளில் குட்கா மறைத்து வைத்து விற்கப்படுவது தெரிய வந்தது. :அதனைத்தொடர்ந்து புலியூர், பூவலம்பேடு ஆகிய பகுதியில் உள்ள பொட்டிகடைகளில் தொடர்ந்து பாதிரிவேடு போலீஸ் நடத்திய சோதனையில் அப்பகுதியில் உள்ள டீ கடை ஒன்றில் அக்கடை உரிமையாளர் சீனிவாசன் (37) என்பவர் தனது கடையில் விற்பனைக்காக மறைத்து வந்திருந்த 62 கிலோ குட்கா இருப்பது கண்டறியப்பட்டு, 62 எடையிலான குட்காவை பறிமுதல் செய்து மேலும் சட்டத்துக்கு விரோதமாக குட்காவை விற்பனை செய்த சீனிவாசனை பாதிரிவேடு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று அவரிடம் தொடர் விசாரணை காவல் துறையினர் மேற்கொண்டதில் சுற்றுவட்டார பகுதிகளுக்கும் அக்கடையில் இருந்து சப்ளை செய்யப்படுவதாக தெரிவித்ததின் அடிப்படையில் சீனிவாசனை கைது செய்து அவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.