ஸ்ரீவாஞ்சியம், பிப். 08 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் …
திருவாரூர் மாவட்டத்தில் தொன்மை சிறப்பு வாய்ந்த ஸ்ரீவாஞ்சியம் ஸ்ரீவாஞ்சிநாத சுவாமி சிவாலய குடமுழக்கு விழா நடைபெற உள்ள நிலையில், அங்கு உள்ள அர்த்த மண்டபத்தில் ஏற்பட்டுள்ள விரிசலை அறநிலையத்துறை நிர்வாகம் கண்டுக் கொள்ளாமல் அலட்சியம் காட்டுவதால், பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
புகழ்வாய்ந்த ஸ்ரீவாஞ்சியம் ஸ்ரீவாஞ்சிநாத சுவாமி சிவாலயத்தின் குடமுழக்கு விழா இன்று காலை வெகுச்சிறப்பாக நடைபெற்றது. இந்நிலையில் ஆலயத்தின் பிரதான அர்த்த மண்டபத்தில் காணும் விரிசலை இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகம் கண்டுகொள்ளாமல் இருப்பது பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தாலுக்காவிற்கு உட்பட்ட ஸ்ரீவாஞ்சியம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீமங்களாம்பிகை சமேத ஸ்ரீவாஞ்சிநாதர் சுவாமி சிவாலயம் மிகவும் தொன்மை வாய்ந்த ஆலயமாக கூறப்படுகிறது. மேலும் இவ்வாலயம் காசிக்கு நிகரானதெனவும், இத் ஸ்தலத்தின் சிறப்பு குறித்து தேவார திருவாசக பதியங்களில் பாடப் பெற்றுள்ளதாக தலவரலாறு தெரிவிக்கிறது.
இவ்வாலயத்தில் நாட்டிலேயே எந்த ஆலயத்திலும் காணமுடியாத சிறப்பாக ஸ்ரீஎமதர்மனுக்கு என தனி சன்னதி உள்ளது. மனிதர்களுக்கு ஏற்படும் எமபயத்தை நீக்கி ஆயுளை அதிகரிக்கும் பலன் கொண்ட இவ்வாலயத்தினை ஆயுள்விர்த்தி அளிக்கும் ஸ்தலம் என்ற சிறப்பையும் பெற்றுள்ளது..
இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட பல்வேறு சிறப்புகளைக் கொண்ட இவ்வாலயத்தின் திருப்பணிகள் கடந்த ஓராண்டுக்கு மேலாக உபயதாரர்களைக் கொண்டு நடைபெற்று நிறைவடைந்த நிலையில் இன்றுக் காலை 9 மணிக்கு மேல் குடமுழுக்கு நடைபெற உள்ளது.
ஆனால் இவ்வாலயத்தின் பிராதான அம்மன் சன்னதிக்கு எதிரே உள்ள கருங்கல்லால் ஆன அர்த்த மண்டபத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிறிய அளவில் இருந்த விரிசல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருந்து வந்துள்ளதாகவும், அதுக் குறித்து தற்போது ஆலய குடமுழுக்கு விழாவிற்கான திருப்பணிகளை மேற்கொண்ட ஸ்தபதியர்கள் ஆலய நிர்வாக அதிகாரி ராஜாவிடம் பலமுறை சுட்டிக்காட்டி மண்டபம் இடிந்து விழும் அபாயம் இருப்பதாக எச்சரித்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இருப்பினும் அதுக் குறித்து ஆலய நிர்வாக அதிகாரி ராஜா, இந்து சமய அறநிலையத்துறை உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றதாகவும், ஆனால் இந்து சமய அறநிலையத்துறை உயர் அதிகாரிகள் அர்த்த மண்டபம் சீரமைக்க உபயதாரர்கள் கிடைத்தால் செய்யுங்கள் எனத் தெரிவித்தாகவும், கூறப்படுகிறது.
இந்நிலையில் குடமுழுக்கு விழா நடைபெற உள்ள நிலையில் ஆலய திருப்பணி வேலைகளை மேற்கொண்ட ஸ்தபதியர்கள் அர்த்த மண்டபம் விரிசல் குறித்த செய்தியினை பொதுவழியில் தெரிவித்து வெளிகொண்டு வந்துள்ளனர்.
ஆலயத்தின் பிரதான அர்த்த மண்டபத்தில் ஏற்பட்டுள்ள விரிசல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருந்து வருவதால் ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் மத்தியில் பெரும் பதட்டம் நிலவி வருவதோடு, அறநிலையத் துறையின் அலட்சிய போக்கிற்கு கண்டனம் தெரிவித்தும் மேலும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை விடுக்கின்றனர்.
வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற ஸ்ரீவாஞ்சியம் அருள்மிகு வாஞ்சிநாத சுவாமி சிவாலய குட குழுக்கு விழா ..
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தாலுக்காவிற்கு உட்பட்ட ஸ்ரீவாஞ்சியம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீமங்களாம்பிகை சமேத ஸ்ரீவாஞ்சிநாதர் சுவாமி சிவாலயம். மிகவும் தொன்மைவாய்ந்த இந்த ஆலயம் காசிக்கு நிகரானது எனக்கருதப்படுகிறது..
மேலும் மூர்த்தி தளம் தீர்த்தம் அமைப்பெற்ற சிறப்பு வாய்ந்த இந்த தலம் தேவார திருவாசக பதிகங்களில் பாடப்பெற்றுள்ளது.
மேலும், இவ்வாலயத்தில் எமதர்மனுக்கு என தனி சன்னதி அமையப்பெற்று உள்ளது. மனிதர்களுக்கு ஏற்படும் எமபயத்தை நீக்கி ஆயுளை அதிகரிக்கும் பலன் கொண்ட இவ்வாலயத்தினை ஆயுள்விருத்தி அளிக்கும் ஸ்தலம் என்ற சிறப்புக்குரியது.
இந்த ஆலயத்தின் அஷ்ட பந்தன கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது..
கும்பாபிஷேகத்தை ஒட்டி கடந்த 29 1 2024 விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கி அமைக்கப்பட்டு எட்டு கால யாக பூஜைகள் நடைபெற்று தொடர்ந்து பூர்ணாஹூதி நடைபெற்றது. தொடர்ந்து இன்று காலை நாலு மணிக்கு நடைப்பெற்ற விக்னேஸ்வர பூஜையை தொடர்ந்து.. எட்டாம் கால யாகசாலை பூஜை நடைபெற்று பூர்ணாஹூதி மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து ஒன்பது மணிக்கு யாத்திரா தானம் யாகசாலையிலிருந்து
மேளதாளங்கள் முழங்க புனித நீர் அடங்கிய கடங்கள் புறப்பட்டு சரியாக 10.00 மணிக்கு அனைத்து விமான கோபுரங்களிலும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பக்தர்களுக்கு ட்ரோன் மூலம் புனித நீர் தெளிக்க பட்டது.
பிறகு மூலவருக்கு அபிஷேகம் மகா தீபாராதனை நடைபெற்ற பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இந்த கும்பாபிஷேகத்திற்கு சென்னை கோவை திருச்சி மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்தும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்திருந்து கும்பாபிஷேகத்தை கண்டுகளித்தனர்.
கும்பகோணம் அருகே திருபுவனம் தோப்பு தெருவில் உள்ள ஸ்ரீ சுந்தரமூர்த்தி விநாயகர், ஸ்ரீ செல்வமாரியம்மன், ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.